Thursday, March 27, 2008

டெல்லி நீதிமன்றத்தில் ஒலிக்கும் மனுசாஸ்திரத்தின் குரல்!

பாப்பான் கொலை செய்தாலும் அவன் தேசத்தின் சொத்தாம்!

1999 ம் ஆண்டு ஜனவரி 23 ம் தேதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபர் ஷிவானி பட்நாகர் அவரது டெல்லி இல்லத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் போன்ற பெரும்புள்ளிகளின் பெயர்கள் அடிப்பட்டது.

நான்கு வருடங்கள் கழித்து 2003 ம் ஆண்டில் ஹரியானாவின் முன்னாள் சிறைத்துறை ஐ. ஜி ரவி காந்த் ஷர்மா, ஸ்ரீ பகவான், சத்யா பிரகாஷ், பிரதீப், வேத் ஷர்மா, மற்றும் வேத் (எ) காலு ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை), 120-B (கிரிமினல் சதி), 201 (சாட்சியங்களை அழித்தல்) , 401 (சமூக விரோதிகள் தொடர்பு), 403 ( வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆறு வருட நீதி விசாரணைக்கு பிறகு நேற்று ( மார்ச் 24, 2008) குற்றவாளிகளான ரவி காந்த் ஷர்மா, ஸ்ரீ பகவான், சத்யா பிரகாஷ், பிரதீப் ஷர்மா ஆகியோர்க்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சாஸ்திரி தீர்ப்பளித்திருக்கிறார்.

மரணதண்டனையை எதிர்ப்பவன் என்கிற அடிப்படையில் ஆர்.கே ஷர்மாவிற்கு மரணதண்டனை அளிக்கப்படாததை நான் வரவேற்கிறேன். ஆனால் அவருக்கு மரணதண்டனை அளிக்கப் படாததற்கு நீதிபதி சாஸ்திரி சொன்ன காரணம்தான் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

அத்தீர்ப்பில் "மக்கள் பிரநிதிகளால் இயற்றப்பட்ட சட்ட வரைமுறைகளுக்கு இந்த நீதிமன்றம் கட்டுப்படுகிறது. சட்டப்படி இக்குற்றத்திற்கு என்ன குறைந்தபட்ச தண்டனை அளிக்க முடியுமோ அதை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்த நீதிமன்றம் இருக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. ( சட்டம் மட்டும் குறுக்கே வராவிட்டால் வர்ணாசிரம கோட்பாடுகளின்படி "பிராமணன் கொலை செய்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்தால் போதும்" என்று தீர்ப்பளித்திருப்பார் நீதிபதி திரு சாஸ்திரி).

மேலும் இந்த கொலைக்குற்றத்தை நீக்கிவிட்டு பார்த்தால் ரவி காந்த் ஷர்மா இந்திய தேசத்திற்கு ஒரு பெரும் சொத்தாக ( " except for the crime in question, Sharma was an asset to this nation") இருந்தார் என நீதிபதி சாஸ்திரி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கர்ப்பிணி பெண்ணை (அவள் உத்தமியா இல்லையா என்பது இரண்டாம் பட்சம்) கொலை செய்தவன் தேசத்தின் சொத்தாக சித்தரிக்கப்படுவது, குற்றவாளி மற்றும் நீதிபதி இருவருமே பார்ப்பனராக இருந்ததால் மட்டுமே சாத்தியம்.

இந்தியாவில் வர்ணாசிரமம் இன்னும் ஒழிக்கப்படவில்லை.

நன்றி: http://lemuriyan.blogspot.com/2008/03/blog-post_24.html

தவறு செய்யும் பார்ப்பனர்களுக்கு என்ன தண்டனை விதிக்கலாம் என்று மனு சாஸ்திரம் சொல்வதை பாருங்கள்!

'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த் தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).

பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379)

இப்படியெல்லாம் மனுசாஸ்திரத்துலே சொல்லி இருக்கறச்சே, நீதிபதி சாஸ்திரி எப்படிங்காணும் ஷர்மாவுக்கு மரண தண்டனை கொடுப்பார்?

No comments: