Wednesday, March 12, 2008

மலேசியா தேர்தலும் சந்துல சிந்து பாடும் பார்ப்பனர்களும்!

"உன் பணம் பணம் என் பணம் பணம் உன் பணம் என் பணம்"

அப்படின்னு பிரபு தேவா நடிச்ச ஒரு படத்திலே, பாட்டு ஒன்னு வரும். அதைப் போலவே,

"என் வெற்றி...என் வெற்றி..
உன் வெற்றி...என் வெற்றி...
என் தோல்வி..உன்தோல்வி...
உன் தோல்வி...உன் தோல்வி.."

என்றுப் பாடுவது ஒரு குழுவின் வழக்கம். அந்தக் குழு யார் என்று நான் சொல்லித் தான் தெரியுனும்மா. வேற யார், பார்ப்னயீயத்தை ஆதரிக்கும், பார்பனர்கள்.

வழிப்பாடு உரிமைக் கேட்டால்,"நீ கால்...நான் முகம்...என்ன செஞ்சாலும் உள்ளே விட மாட்டேன்" (நீ காற்று , நான் மரம் என்ற ராகத்தில் வாசிக்கவும்..), என்றுப் பாடுவார்கள். ஆனால், அவர்களுக்குத் தேவை என்றால், பொந்து மதம் (நன்றி : மீண்டும் லக்கிக்கு), இந்துக்கள் என்று ஒரு குழுவாக உருவகப்படுத்தி, மாய் மாலம் செய்வார்கள்.

இப்பக் கூட பாருங்க, நம்ம ஜடாயு ஐயா, மலேசியாவில் இந்துக்களின் வெற்றி என்றுக் கூப்பாடு போடுகிறார். இந்துராப் என்ற அமைப்பின் கீழ் ஒன்றினைந்து போராடியதாகவும், அதனால் மட்டுமே வெற்றி என்றும் கூவுகிறார். மலேசியாவில் நீங்க, பொந்து மதம் இல்லை, வேற எந்த மதமாக இருந்தாலும், கவனிக்கப்பட்டியிருக்க மாட்டீங்க. அவர்கள் முன்னிறுத்தியது மலாய் இனம். நீங்கள் தமிழர்/இந்தியர் என்றக் காரணத்திற்காகத் தான் புறக்கணிக்கப்பட்டார்கள்.

இதே, பொந்து மதத்தை வைத்தே தான் இம்முறை மக்களை திசை திருப்ப முயன்றார்கள், ம.இ.கவினர். எப்படித் தெரியும்மா, இந்துராப் என்பதை எதிர்க்க,"ஓம் சக்தி" என்ற முழக்கத்துடன், களமிறங்கி, வெளியீடுகள் வந்தன. (பார்க்க : காணொளி ). ஆனால், மக்களுக்கு மதம் சோறு போடும்மா.

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்மெய்வருத்த கூலி தரும்"என்பதை உண்ர்ந்த தமிழர்கள், தமிழர்கள் (இந்தியர்களில் 90% தமிழர்கள் தான்) விழிப்படைந்தார்கள். "மக்கள் சக்தி" என்று ஒன்றுக் கூடினார்கள். இம்முறை ஒவ்வொரு தமிழனும், மக்கள் சக்தி என்று முழங்கியதை, மலாய் இனத்தை ஆதரித்தக் கட்சிகள், சீனர்களுக்கான கட்சிகள் கூட, இந்த மக்கள் சக்தி முழக்கத்தை சுவரொட்டிகளில் தமிழிலே வெளியிட்டு, தமிழர்களிடையே ஆதரவைப் பெருக்கினார்கள்.

போராட்டம், சீனர்களையும், தமிழர்களையும் ஒதுக்கி, மலாய் இன மக்களை மட்டும் முன்னிறுத்திய அரசாங்கத்திற்கு எதிராக. தனியொருவராக தமிழ் இன மக்கள் இதை வென்று விடவில்லை.

டத்தோ சாமி வேலு, இந்தப் பிரச்சனைகள் வருவதற்கு முன், இந்தியாவில் ஒரு அதி முக்கியமான பார்வையாளராக வலம் வந்தவர். தமிழர்களுக்கெதிரான செயல்களுக்கு இன்னமும் துணைப் புரிகிறார் என்றுச் சொன்னவுடன், தமிழக முதல்வர் அவரை சந்திக்ககூட மறுத்துவிட்டார்.

இந்நிலையில், ஜடாயு ஐயா, என்ன சொல்லுறார்..

"மலேசியாவில் இருந்து ஒரு நண்பர் அனுப்பிய மடல்:இன்று காலைச் செய்தி,டத்தொ சாமி வேலு, மலேசிய அரசின் ஒரே தமிழ் மந்திரி,தேர்தலில் தோற்றுப் போனது தான்.தன் சுகத்துக்காக, பதவிக்காக, தன் மக்களைக்காட்டிக் கொடுக்கும் துரோகப் பரம்பரையைஅன்றைய ஜஸ்டீஸ் பார்ட்டியில்பார்த்தோம். இன்றைய கழகங்கள், தமிழ் நாட்டுகம்யூனிஸ்ட் வகையறாக்களிடம்பார்த்தோம் பார்த்து வருகிறோம். இவர்களுக்கு அழிவுகாலம் வராது போலிருக்கிறது.ஆனால், சாமி வேலு தோற்றதில் எனக்கு பரம சந்தோஷம்.அவருக்கு தமிழ் நாட்டில்மரியாதை தொடுத்தது அங்குள்ள உலகத் தமிழ் ஈனத்தலைவர் "

இந்த சந்துல சிந்துப் பாடுறதுன்னு கேள்விப்பட்டியிருக்கோம். ஆனா இப்ப மறுபடியும் பார்க்கிறோம்.

இறுதியாக சாமி வேலுவின் தோல்விக்கு மகிழ்கிறார். இவரின் காழ்புணர்ச்சியயை/மகிழ்ச்சியயை மேலேக் கண்ட பிறகு, சாமி வேலுவின் தோல்விக்கு காரணம் ஒரு இந்துவாகத் தான் இருக்கும் என்று நீங்கள் எல்லாரும் நினைப்பீர்கள். அது தான் இல்லை.

சாமி வேலு தோற்றது, மைக்கேல் ஜெயக்குமார். பெயர் சொல்லுமே அவர் எந்த வித நம்பிக்கையாளர் என்று. அத்தோட விட்டுருவோமா, இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் சண்டை. என்று, மோதுகிற ஆடுகளின் ரத்ததைக் குடிக்கக் காத்திருந்து ஓநாய் போல, காத்துக் கிடத்த ஆர்.எஸ்.எஸ், முகத்தில் கரி, மறுபடியும் எப்படி பூசுனாங்க தெரியும்மா.

மைக்கேல் ஜெயக்குமார் நின்று போட்டியிட்டு வெற்றிப் பெற்றது, கெடிலான் எனப்படும் Parti Keadilan Rakyat. அதை தலைமை தாங்குபவர், அன்வர் இப்ராகின். ஒரு மலாய் இனத்துக்காரர். இசுலாமியர். இதில் ஒரு வேடிக்கை, அந்தக் கட்சியின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு, People's Justice Party . அந்தக் கட்சி முன்னிறுத்தும் முக்கியக் கொள்கை, அனைத்து மக்களையும் சமமாக பாவித்து, அரசு நடத்த வேண்டும் என்பதே.

ஆக, இந்த முறை தமிழர்கள் வென்றியிருக்கிறார்கள். மதம் தோற்றியிருக்கிறது.


தொடர்புடையச் சுட்டிகள் :-
1. மலேசிய மக்களின் போராட்டம் 1
2. மலேசிய மக்களின் பேரணி , கோரிக்கைகள்
3. மலேசிய தேர்தல் பார்வை
4. தமிழர்களின் வெற்றி
5. பார்ப்பனீயம்

நன்றி: TBCD

No comments: