Saturday, March 8, 2008

கணவன் பொம்பளப் பொறுக்கியா இருந்தா மனைவி என்ன செய்யனும்?

பார்ப்பனர்களின் மதத்தில் பெண்ணுரிமை எப்படி பாதுகாக்கப் படுகிறது என்பதற்கு ஒரு சாம்பிள்.

"கணவன் துராசாரமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்த்ரீலோலனா யிருந்தாலும் நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்த்ரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது." (மநு: 5:154)

இன்னொரு சாம்பிள்.

"கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடியனாகவிருந்தாலும், நோயாளியாகவிருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவளுக்கு அலங்காரம், துணிமணிகள், படுக்கை இவற்றை கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது." (மநு: 9:78)

இதுமட்டுமல்ல.. பார்ப்பனர்களின் மதம் பெண்களைப் பற்றி எவ்வளவு உயர்ந்த அபிப்ராயம் வைத்திருக்கிறது தெரியுமா? இதோ..

"மாதர்களின் சுபாவமே மனிதர்கட்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும்." (மநு: 2:213)

இன்னொன்று..

"மாதர்கள் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்." (மநு 9:15)

இவங்களோட அம்மா, தங்கை, மனைவி, மகள் எல்லாம் மாதர்கள் இல்லையா?

இதையெல்லாம் விட படு கேவலமான ஒரு'கொள்கை'யும் மநுவில் இருக்கிறது.

"தாய், தங்கை, பெண் இவர்களுடன் தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது" (மநு: 2:215)

இதுக்கு என்ன காரணம்? தாய், தங்கை, மகளாக இருந்தால் கூட தனியா இருக்குறப்போ இவனோட மனசை அவங்க கெடுத்துடுவாங்களாம். அட கேடுகெட்ட ஜென்மங்களே.

மனைவியை வேற எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் பாருங்க.

"ஒருவன் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம்." (மநு: 9:52)

இன்னொன்று.

"பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாயிருந்தால், அப்போது அந்த ஸ்த்ரீ தன் கணவர், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஆகியவர்களுடன் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டு பண்ண வேண்டியது" (மநு: 9:59)

இதையெல்லாம் படிச்சுட்டு பார்ப்பன பெண்கள் தங்கள் வீட்டு ஆண்களின் முகத்தில் காரித்துப்பி தொடப்பக்கட்டையால அடிச்சு விரட்டுனா அதுக்கு நாம பொறுப்பில்லை!

6 comments:

Giriraj said...

அப்படியா?? அது சரி..பார்பனர்களுக்கு சொல்லப் பட்ட இந்த விஷயங்களை இக்காலத்தில் பார்பனர்கள் வெகு சொற்பமாகவும், பிறர் மிக அதிகமாகவும் பின்பற்றுவதற்கும் எதாவது 'கதை' இருக்கிறதா?

உண்மை உடையான் said...

கிரிராஜ், பார்ப்பனர்கள் இக்காலத்தில் இதை சொற்பமாக பின்பற்றுகிறார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்? யாராவது ஆராய்ச்சி, சர்வே பண்ணினாங்களா?

இக்காலத்தில் பார்ப்பனர்கள் சொற்பமாக பின்பற்றுகிறார்கள் என்றால் அக்காலத்தில் அதிகமாக பின்பற்றினார்கள்தானே? அக்காலத்தில் அது நியாயமானதாக இருந்ததா?

எக்காலத்தில் இந்த பின்பற்றுதலை குறைத்துக் கொண்டார்கள் பார்ப்பனர்கள்?

Giriraj said...

மனு என்ன வேண்டுமானலும் சொல்லி இருக்கட்டும்..யார் பின் பற்றுகிறார்கள் என்பது தானே முக்கியம்?

பதிவு எழுதுவதற்கு முன் கொஞ்சம் சர்வே செய்திருப்பீர்கள் என தப்பாக நினைத்து விட்டேன். சும்மா கண்ணை மூடிக்கொண்டு ஆதாரம் இல்லாமல் தான் எழுதி இருப்பீர்கள் போல இருக்கிறது...

none said...

உண்மை உடையான் அவர்களே,
நீங்கள் குறிப்பிட்ட மனு சாஸ்த்திரத்தில் காணப்படும் பல விடயங்கள் எல்லா பார்ப்பனர்கள் குடும்பத்திலும் பின்பற்றப்படுகின்றதா?. அத்துடன் மூன்று வருடங்களுக்கு முன்னர் தமிழக வாரப்பத்திரிகை ஒன்றில் தென் தமிழகத்தில் சில "நாயக்கர்" குடும்பங்களில் (யாரையாவது புண்படுத்துவதாக இருந்தால் மன்னிக்கவும்) வயதுக்கு வந்த பெண்களை சிறு வயது யையன்களுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், அச்சிறுவர்கள் வயதுக்கு வருவதற்கு முன்னமே அவர்களது மனைவியர் பல குழந்தைக்கு தாயாகிவிடுவதாயும் படித்திருக்கின்றேன். எனவே இது தமிழகத்தில் சில குடும்பங்களில் உள்ள பரவலான பிரச்சினை. இதில் பார்ப்பனர்களை மட்டும் குறிப்பிட்டு சொல்வது பொருத்தமுடையதாக இல்லை.

உண்மை உடையான் said...

//மனு என்ன வேண்டுமானலும் சொல்லி இருக்கட்டும்..யார் பின் பற்றுகிறார்கள் என்பது தானே முக்கியம்?//

அப்படியென்றால் பார்ப்பனர்களுக்கும் மனுவுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்கிறீர்களா? அல்லது மனு சொன்னதையெல்லாம் பார்ப்பனர்கள் பொருட்படுத்துவது கிடையாது என்கிறீர்களா?

உண்மை உடையான் said...

//நீங்கள் குறிப்பிட்ட மனு சாஸ்த்திரத்தில் காணப்படும் பல விடயங்கள் எல்லா பார்ப்பனர்கள் குடும்பத்திலும் பின்பற்றப்படுகின்றதா?. //

தூ.குருவி அவர்களே, இந்த விடயங்களை பார்ப்பனர்கள் குடும்பத்தில் பின்பற்றுகிறார்களா இல்லையா என்பதை பார்ப்பனர்கள்தான் சொல்ல வேண்டும். 'பார்ப்பனர்கள் இக்காலத்தில் இதை சொற்பமாக பின்பற்றுகிறார்கள்' என்று கிரிராஜ் சொன்னார். அவரிடம் நான் கேட்டேன் /எப்படி சொல்கிறீர்கள்? யாராவது ஆராய்ச்சி, சர்வே பண்ணினாங்களா? இக்காலத்தில் பார்ப்பனர்கள் சொற்பமாக பின்பற்றுகிறார்கள் என்றால் அக்காலத்தில் அதிகமாக பின்பற்றினார்கள்தானே? அக்காலத்தில் அது நியாயமானதாக இருந்ததா?எக்காலத்தில் இந்த பின்பற்றுதலை குறைத்துக் கொண்டார்கள் பார்ப்பனர்கள்? /
கிரிராஜ் இதற்கு பதில் சொல்லவில்லை. உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

//இது தமிழகத்தில் சில குடும்பங்களில் உள்ள பரவலான பிரச்சினை. இதில் பார்ப்பனர்களை மட்டும் குறிப்பிட்டு சொல்வது பொருத்தமுடையதாக இல்லை.//

நீங்கள் சொல்வது குழந்தை திருமணமும் அதன் பக்க விளைவுகளையும் பற்றி. நான் சொல்ல வந்த விடயமே வேறு. பதிவை மறுபடியும் படித்துப் பாருங்கள்.