Showing posts with label இந்துத்துவம். Show all posts
Showing posts with label இந்துத்துவம். Show all posts

Tuesday, July 22, 2008

கொள்கை இல்லாக் கூட்டத்தார்!

தமக்கென தெளிவான ஒரு கொள்கையும், அக்கொள்கையில் உறுதியான பிடிப்பும் உள்ளவர்கள், தம் கொள்கையைப் பற்றி பெருமையாகப் பேசவோ, அதைப் பற்றி விளக்கம் கொடுக்கவோ தயங்குவதில்லை!

ஆனால், தமக்கென எந்த ஒரு கொள்கையும் இல்லாதவர்கள், அல்லது வெளியில் சொல்ல முடியாத கொள்கைகளைக் கொண்டவர்கள், பிறரின் கொள்கைகளை குறை சொல்வதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள்.

இஸ்லாம் மத இணைய தளங்களில் 'மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்' என்ற வசதியை செய்து வைத்துள்ளன. தமிழில் கூட இதுபோல நிறைய இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் இஸ்லாம் மதம் பற்றிய மாற்றுமதத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். கிருஸ்துவ மதம் பற்றி இப்படிப்பட்ட இணைய தளங்கள் தமிழில் இல்லையே தவிர ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான தளங்கள், புத்தகங்கள் உள்ளன.

ஆனால், இதுப்போன்ற வசதி பார்ப்பன ஹிந்துத்துவ கொள்கைகளைப் பற்றி மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா? அந்த பார்ப்பன மனுதர்ம கொள்கைகளைப் பற்றி கேள்விக் கேட்டு - விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்).

ஆனால் இணையங்களில் பார்ப்பனர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? கிருஸ்துவ பெயரை வைத்துக் கொண்டு இஸ்லாம் மதத்தை திட்டி எழுதுகிறார்கள். இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு கிருஸ்துவ மதத்தை திட்டி எழுதுகிறார்கள். இந்த இரு மதத்தினரும் சண்டை போட்டுக் கொள்வதை தாம் பார்த்து ஆனந்தமடைய வேண்டும் என்ற கேடுகெட்ட நோக்கமே இதன் காரணம். மேலும் பார்ப்பனர்கள் புனைப்பெயர்களின் பின்னே ஒழிந்து கொண்டு பெரியாரை திட்டுகிறார்கள். ஆபாச கதைகளை எழுதி பதிவேற்றுகிறார்கள். மாட்டிக் கொண்டால் காலில் விழாத குறையாக கெஞ்சி கேவலப்பட்டுப் போகிறார்கள். ஆனால், முஸ்லீம்கள் கிருஸ்துவர்கள் செய்வது போல தமது பார்ப்பன மதத்தின் கொள்கைகளை விளக்கி இவர்கள் இணையத்தில் எழுத மாட்டார்கள். அந்த கொள்கைகளைப் பற்றி கேள்விகள் வந்தால் அதற்கு பதில் சொல்ல மாட்டார்கள். காரணம் என்ன?

ஏன் இஸ்லாமியர்கள் கிருஸ்துவர்கள் போல பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? பார்ப்பன மனுசாஸ்திர கொள்கைகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளனவா? பார்ப்பன கேள்வி பதில் தளங்கள் உள்ளனவா? பார்ப்பனர்கள் பதில் சொல்லாமல் ஒளிந்துக்கொள்கிறார்களா?

"இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை" யார் யார் நடத்துகிறார்கள் என்று இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும், தமிழ் நாட்டிலுள்ளவர்களையும் கேட்டால், பெரும்பான்மையாக மாற்று மதத்தவர்களும் உடனே பதில் சொல்லிவிடுவார்கள். அதாவது, உலக அளவில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் நடத்துகிறார். அதே போல, தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நிகழ்ச்சியாகிய உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியை திரு பி. ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இந்த விவரங்கள் எல்லாருக்கும் தெரியும், இன்னும் பல நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருக்கின்றன.

கிறிஸ்தவ போதகர்கள், ஊழியர்களின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், உடனே குறைந்தது 10 பேரின் பெயரை அதிகமாக சிந்திக்காமலேயே சொல்லிவிடுவார்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் அதிகம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடதுவதில்லை என்றாலும் மாற்று மதத்தவர்கள் கேட்கும் கிறிஸ்தவ கேள்விகளுக்கு பதிலளிக்க நிறைய இணைய தளங்கள் இருக்கின்றன.

இஸ்லாமியர்களும் கிருஸ்துவர்களும் கேள்வி பதில் வசதி செய்து பதில் கொடுக்கும்போது, ஏன் பார்ப்பனர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை? இந்த கேள்விக்கான பதிலை இனி பார்ப்போம். பார்ப்பன சகோதரர்கள் இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மேல் கோபப்படவேண்டாம், நான் எழுதுவதில் யதார்த்தம் உள்ளதா இல்லையா என்பதை சிந்தியுங்கள்.

பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தாததற்கு 6 காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த காரணங்களை மேலிருந்து கீழாக (Count Down 6 to 1) ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

காரணம் 6. இன்று உலகில் நிலவும் சமூக அவலங்களுள் மிக அசிங்கமானவை சாதிப் பிரிவினையும் தீண்டாமைக் கொடுமையுமே. இவ்விரண்டிற்கும் ஆணி வேராக இருப்பது பார்ப்பனர்களின் மனுசாஸ்திர கொள்கைகளே. முழு உலகமும் சேர்ந்து எதிர்த்தாலும் பார்ப்பனர்கள் சாதிப்பிரிவினையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அம்பேத்கர், பெரியார் போன்றோரெல்லாம் சாதிப்பிரிவினை என்ற இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க பாடுபட்டார்கள்தான். ஆனால் அவர்களெல்லாம் பபர்ப்பனர்களல்ல. சாதிப்பிரிவினை ஒழிய வேண்டும் என்று உண்மையாய் பாடுபட்ட ஒரு பார்ப்பனரையாவது காட்ட முடியுமா? பாரதியார் கூட 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாப்பாவைப் பார்த்து பொய்தான் சொன்னார். பார்ப்பன சமுதாயமே நால்வர்ண சாதிப்பிரிவினையின் அடிப்படையில் கட்டியெழுப்பப் பட்டதுதான். இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் துணிச்சல் பார்ப்பனர்களுக்கு இல்லாததால் தமது கொள்கைகளைப் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியை அவர்கள் நடத்தவே மாட்டார்கள்.

காரணம் 5. பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றுக் கண்ணாக இருப்பவை பார்ப்பன வேதங்களே. மனுசாஸ்திரம் பெண்களை ஒரு கேவலமான பிறவிகளாக சித்தரிக்கிறது. பண்டைய காலத்திலிருந்தே வீடு, பசு, தோப்பு, தோட்டம் மாதிரி பெண்களையும் ஒரு பொருளாகவே (commodity) கருதி நடத்தி வருபவர்கள் பார்ப்பனர்கள். கோவிலுக்கு பொட்டு கட்டுதல், தேவதாசி முறை போன்ற பெயர்களில் பெண்களை போகப்பொருளாக நடத்தியவர்கள் இவர்கள். கேள்வி பதில் என்று வந்தால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வரும். அங்கு கேள்விகளைக் கேட்கும் மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணுரிமைவாதிகளுக்கு பார்ப்பனர்களால் பதில் சொல்லி மாளாது. எனவே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

காரணம் 4. பார்ப்பனர்கள் அக்கால அரசர்களை மூளைச் சலவை செய்து பொன்னையும் பொருளையும் ஏமாற்றி பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த ஈனச்செயலுக்கு உறுதுணையாக இருந்தது பார்ப்பனர்கள் வேதங்களை கற்றவர்கள் என்ற ஒரு தகுதி மட்டுமே. மங்கலம்' என்கிற பெயரில் முடிகிற ஊர்ப் பெயர்கள் இன்று நமக்கு வெறும் ஊர்ப் பெயர்களாக மட்டுமே தெரியும். ஆனால், அரசன் கண்ட ஒரு கெட்ட கனவுக்குப் பரிகாரமாக, நான்கு வேதங்களைக் கற்றவர்களுக்கு அவர்கள் விரும்புகிற பூமியைத் தானமாக தருகிற இடத்துக்கு 'மங்கலம்', 'அகரம்' என்கிற அடைமொழியுடன் பெயர் தந்தனர். அதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றைத் தேடிச் சென்றால்தான், நம் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தீவிரம் நமக்குப் புரியும். இதற்கு போட்டியாக மற்றவர்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகவே பார்ப்பனர்கள் தங்களைத் தவிர வேதத்தை படிக்கும் மற்றவர்களின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் அச்சுறுத்தி வைத்திருந்தனர். கேள்வி பதில் நிகழ்ச்சி என்றால் பார்ப்பனர்கலின் இந்த ஈனச்செயல்களெல்லாம் வெளிச்சத்திற்கு வந்து விடும். அதனால் பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

காரணம் 3. பார்ப்பனர்களின் வேதங்களும் சட்டங்களும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே அனுகூலமானவை. "அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412)" என்று சொல்கிறது மனுசாஸ்திரம். இது போன்ற, எண்ணற்ற, பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் சட்டதிட்டங்களை கொண்டதுதான் பார்பனர்களின் வேதங்கள். இதுபோன்ற சட்டங்களை இன்றைய சூழ்நிலையில் பார்ப்பனர்களால் எவ்வகையிலும் நியாயப் படுத்தவே முடியாது. கேள்வி பதில் நிகழ்ச்சியில் இவை பற்றி கேள்வி வந்தால் பார்ப்பனர்கள் எப்படி பதில் சொல்வார்கள்? அதனாலேயே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள்.

காரணம் 2. மேலும் பார்ப்பனர்களின் மனுசாஸ்திரத்தின்படி பார்ப்பனர்கள் என்ன குற்றம் இழைத்தாலும் அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையே விதிக்கப்பட வேண்டும். அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அவர்களுக்கு வேறு மாதிரியான கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379)

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281)

பார்ப்பான்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று சொல்லும் மனுசாஸ்திரம் மற்றவர்களுக்கு பாரபட்சமான தண்டனைகளை வழங்குகிறது. இதற்கெல்லாம் பார்ப்பனர்களால் ஒருக்காலும் பதில் சொல்லவே முடியாது. அதனாலேயெ பார்ப்பனர்கள் கேள்விபதில் நிகழ்ச்சிகள் நடத்தாமல் ஒளிந்து கொள்கிறார்கள்.

காரணம் 1. கிரிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அவரவர்கள் மதம் சிறந்தது என்று உளப்பூர்வமாக நம்புகிறார்கள். மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தை தழுவினால் அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையும் என்றும் அவர்கள் இறந்த பிறகு சொர்க்கம் செல்வார்கள் என்று அவர்கள் நம்புவதால் மற்ற மதத்தினருக்கு தங்கள் மதத்தின் சிறப்பியல்புகளை எடுத்துச் சொல்லி அவர்கள் தங்கள் மதத்தை தழுவும்படி அழைக்கிறார்கள். இது மற்ற மதத்தினர் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே கிரிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்துவதன்மூலம் தங்கள் மதத்தைப் பற்றி மற்றவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கிறார்கள். ஆனால் பார்ப்பன சாதியோ பிறப்பினால் வருவது. வேறு மதத்தை சேர்ந்தவர்களல்ல, வேறு சாதியை சேர்ந்த இந்து கூட பார்ப்பனராக சாதி மாற முடியாது. அதனால் தங்கள் சாதியின் (இல்லாத) அருமை பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் பார்ப்பனர்களுக்கு இல்லை. தவிரவும் பார்ப்பனர்கள் மற்றவர்கலை மனிதர்களாகவே மதிப்பதில்லை. இந்த உண்மையை எப்படி கேள்விபதில் நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்கள் விளக்குவார்கள்? அதனாலேயே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

கட்டுரை முற்றிற்று

Saturday, May 31, 2008

மகர ஜோதி மனித செயலா?

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மகர விளக்கு பூஜையின்போது, பொன்னம்பல மேடு என்று அழைக்கப்படும் மலைமுகட்டில் தெரியும் ஜோதி இயற்கையானது அல்ல என்றும், அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான் என்றும் சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரு கூறியதை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

சபரிமலைக்கு ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜையின்போது, தென் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். 40 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு வரும் அவர்கள், ஜனவரி 14-ம் தேதி மாலை ஐயப்பனுக்கு கற்பூர ஆரத்தியுடன் பூஜை நடைபெறும்போது, பொன்னம்பல மேட்டில் தெரியும் ஜோதி, ஐயப்பனே அங்கு தோன்றி காட்சியளிப்பதாக நம்புகிறார்கள்.

இந்த நிலையில், சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரு, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரது சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மகர விளக்கு வேறு, மகர ஜோதி வேறு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி அன்று கிழக்கு திசையில் தோன்றும் நட்சத்திரத்தைக் குறிக்கும் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், மகர விளக்கு என்பது புராண காலத்தில் ஐயப்பனின் மூலஸ்தானமாக இருந்த பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவதாகும்.

மகர விளக்கு ஏற்றும் இந்த வழக்கம், பரசுராம முனிவரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை நினைவூட்டும் விதமாகத்தான் இப்போது அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. காடுகளில் வசித்த பழங்குடி மக்களால் இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

மகர விளக்கும் மகர ஜோதியும் ஒன்று என நினைக்கும் சிலரது தவறான கருத்துக் காரணமாக இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது இது தேவையில்லாதது என்று அவர் கூறியிருந்தார்.

இதுபற்றி சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், மகர விளக்கு தீபம் எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

நன்றி. பிபிசி

Monday, May 26, 2008

மரம் வெட்டினால் இந்து(த்துவா)க்களின் மனது புண்படும்!

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே சேதுக்கால்வாய் பகுதியில் ராமர் பாலம் இருந்தது என்பது கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை என்றும், நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையில் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்றும் இந்துத்துவ பாஜக-அதிமுக பரிவாரங்கள் கூக்குரலிட்டு வருகிறார்கள்.

இதுகுறித்துக் கருத்துச் சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதி மநுதாரரிடம் "மரம் கூடத்தான் சிலரால் வணங்கப்படுகிறது. அதனை தெய்வம் என்றும்கூட நம்புகிறார்கள். அதற்காக இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதால் யாரும் மரம் வெட்டக்கூடாது என்று சொல்லமுடியுமா?" என்று கேட்டார். இப்படியே மதநம்பிக்கை தும்பிக்கை என்று சொல்லிக் கொண்டே கீழ்கண்டவற்றையும் தடுக்க வாய்ப்புள்ளது.

1) விநாயகரின் வாகனம் எலி என்பதால் யாரும் எலிகளைக் கொல்லக் கூடாது;
எலி மருந்து விற்பதையும் தடை செய்ய வேண்டும்.


2) விஷ்னுவின் வாகனம் பன்றி என்பதால் மூளைக்காய்ச்சல் பன்றியினால்
பரவும் என்று சொல்வதையும் தடை செய்ய வேண்டும்.


3) சிவனின் செல்லப்பிராணி பாம்பு; இனி யாரும் பாம்பை
அடிக்கக்கூடாது.



இப்படியாக கல்,மரம்,ஊர்வன,பறப்பன போக கம்பி எண்ணிய/ எண்ணப் போகும் பலரையும் தெய்வமாக நம்புவதால் அவர்களை சிறையில் அடைப்பதும், குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்வதும் இந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும் என்பதால் சங்கரராமனைக் கொன்ற வழக்கில் முதல் குற்றவாளியாக நடமாடும் தெய்வம் சங்கராச்சாரியாரை எல்லா வழக்குகளிலிருந்தும் விடுவித்து மதநல்லிணக்கம் கெடாமல் காக்க வேண்டும்!

"தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்"
- பாரதியார்

Sunday, May 11, 2008

இந்து மதத்தை ஒழிப்பதுதான் ஒரே வழி: புனிதபாண்டியன்

தலித் மக்களின் பிரச்சினைகளுக்காக கடந்த 12 வருடங்களாக ஊடக தளத்தில் குரல் கொடுத்து வருபவர் ‘தலித் முரசு’ பத்திரிக்கை ஆசிரியர் புனிதபாண்டியன். மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ‘தலித் முரசு’ தன் பாதை மாறாமல் தொடர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர். ‘கீற்று’ இணையதளத்திற்காக அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்..

மாணவர்களிடையே ஈழப் பிரச்சினையின் தாக்கம்:

"...பொதுவாக சீனா போன்ற நாடுகளில் மாணவர்கள் அநியாயத்தை எதிர்த்துப் போராடியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நான் மாணவராக இருந்ததில் இருந்து, இதுவரை அப்படி எந்த மாணவர் குழுக்களும் சமூக மாற்றத்திற்காக இங்கே போராடி வெகுண்டெழுந்ததாக நான் பார்த்ததில்லை. வகுப்பை மட்டம் போடுவதற்கான ஒரு வாய்ப்பாகவே மாணவர்கள் இங்கே போராட்டங்களைப் பார்த்தார்கள். இதே நிலைமைதான் அப்பொழுதும் ஈழப்போராட்டத்திற்கும் இருந்தது. என் கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியர் மட்டும் தான் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தார். திராவிட கழகங்கள், சில அமைப்புகள் பிரச்சினைகளை முன்வைப்பார்கள். அதிலுள்ள மாணவர்கள் எங்கள் கல்லூரிக்கு வந்து ஆதரவு கேட்பார்கள். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்கமாட்டார்கள்...."

தலித் அரசியல்:

"...தமிழக சட்டப்பேரவையில் தற்போது 42 தலித் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதன்பிறகும், ‘தலித்துகள் அரசியல் சக்தியாக மாறும்போது தான் அவர்களது பிரச்சனை தீர்க்கப்படும்’ என்று திருமாவளவன் கூறுகிறார். தலித்துகள் முக்கியமான அமைச்சர் பொறுப்புகளை வகித்தாலும் திருமாவளவன் இதையே தான் கூறுவார். அப்படியானால் அவர் முதல்வராக ஆக வேண்டும். அவர் முதல்வராக ஆக முடியுமா? அப்படியே ஆனாலும் தலித் பிரச்சனை தீர்ந்து விடுமா என்று யோசிக்க வேண்டும். இதற்கெல்லாம் பதில் இல்லாதபோது, தலித் அரசியல் என்பதில் போய் ஏன் விழவேண்டும்? ..."

மதமாற்றமும் தலித் முன்னேற்றமும்:

"...தலித்துகள் முன்னேறுவதற்கு அவர்களுக்கு நிலம் அவசியம் என்பதால் தான் நிலப்பங்கீட்டை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். கயர்லாஞ்சியில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட குடும்பத்திற்கு நிலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நில உடைமையாளர்களாக இருந்திருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் நிலப்பங்கீடு தவறு என்று சொல்லிவிட முடியாது. தலித் கிறிஸ்தவன் தலித் இந்துவை விட மிகமிகக் குறைந்த அளவிலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறான். வன்கொடுமையில் இருந்து தப்பிப்பது முதல் வழி. அதன்பிறகு இழிவை நீக்குவது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம்..."

இந்து மதத்தில் பெண்கள்!

"...ஒன்றை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை என இந்து மதம் போல வேறு எந்த மதமும் பெண்களை அடக்கி ஒடுக்கியதில்லை. இந்து மதத்தை எந்த மதத்தோடும் ஒப்பிடவே முடியாது. இந்து மதம் ஒரு மதமே அல்ல என்று கூறியிருக்கிறார் அம்பேத்கர். வேறு எந்த மதத்திலும் தேவையான சீர்திருத்தங்களை செய்து கொள்ள முடியும். இந்து மதத்தில் அது முடியாது. மற்ற மதங்களில் ஒரு ஜனநாயகத்தன்மை இருக்கிறது. இந்து மதத்தில் அது கிடையாது..."

அம்பேத்கர் தலித் தலைவரா?

"...ஒரு பார்ப்பனர் டாக்டராக இருந்தால் இந்த சமூகம் அவரை ஒரு மிகப்பெரிய டாக்டர் என்று குறிப்பிடுகிறது. ஒரு கவிஞர் பார்ப்பனராக இருந்தால் அவரை தேசியக் கவி என்று கொண்டாடுகிறது. பாரதிதாசன் பார்ப்பனர் அல்லாத காரணத்தினால் அவர் ஒரு தேசியக் கவி கிடையாது. பாரதியார் ஒரு மாநிலத்தில் பிறந்து ஒரே ஒரு மொழியில் மட்டுமே எழுதினாலும் அவர் தேசியக் கவியாக கொண்டாடப்படுகிறார். இதனால் தான் மகாத்மா காந்தி தேசப்பிதாவாக ஆகி, அம்பேத்கர் தலித் தலைவராக சுருங்கி விட்டார். இப்படி தலித் விஷயங்கள் தலித்துகளாலேயே சுருக்கப்பட்டு விட்டது..."

போராட்ட எல்லைகள்!

"...நாம் நடக்கும் சாலையில் ஏன் ஒருவர் மட்டும் செப்டிங் டேங்க் கழுவ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். மலத்தை வாயில் திணிப்பது தவறில்லை என்று நீதிபதி தீர்ப்பு கூறுகிறார். ஏன் சமூகம் இப்படி இருக்கிறது? என்பது மாதிரியான கேள்விகள் தலித்துகளுக்கு மட்டுமோ, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமோ எழ வேண்டிய அவசியமில்லை. சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட அனைவருக்கும் எழ வேண்டும். இந்த சீர்திருத்தத்திலும் இட ஒதுக்கீடு கேட்டுக்கொண்டு, நீ தலித்துக்காக போராடிக்கொள், நான் பிற்படுத்தப்பட்டோருக்காக போராடிக் கொள்கிறேன், என் போராட்ட எல்லை இதுவரை தான், உன் போராட்ட எல்லை அதுவரை என்று பேசுவது அயோக்கியத்தனம்."

நேர்காணலை முழுமையாகப் படிக்க இங்கே அழுத்தவும்.

நன்றி: கீற்று.காம்

Tuesday, April 22, 2008

மறைக்க மறந்த குடுமிகள்!

தமிழ்மணம் திரட்டியிலிருந்து நீக்கப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் முக்காடிட்டுக் கொண்டு இங்கு மீண்டும் நுழைந்திருக்கின்றனர். அதுவும் கிருஸ்துவ முக்காடு!

உண்மையடியான், சத்தியவான் போன்ற கிருஸ்துவப் பெயர்களில் இஸ்லாத்தினை தாக்குவதற்கென்றே சில வலைப்பதிவுகள் முளைத்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்தப் பதிவு! (படம் 1)

இந்தப் பதிவிற்கு சமீபத்தில் வருகையளித்த ஒருவர் கிச்சு என்பவர்.

இந்த கிச்சுதான் நேசக்குமாரை நேரடியாக சந்தித்து பேட்டி கண்டு தனது வலைப்பதிவில் எழுதியவர். அதன் பிறகு, 'இல்லியே, நான் அவர பார்க்கவே இல்லியே. சும்மாச்சிக்கும் பொய் சொன்னேன்' என்று 'ஜகா' வாங்கியது வேற கதை!

இதே கிச்சு தான் 'தமிழ் பாரதி' என்ற பெயரில் pageflakes.com-ல் தனக்கொரு பக்கம் தொடங்கியிருக்கிறார். (படம் 2)

இதில் திரட்டப்படும் பதிவுகளில் சில:
நேசக்குமார்
அரவிந்தன் நீலகண்டன்
பாலா
புதுவை சரவணன்
எழில்
ஜடாயு
ஜயராமன்

இந்தப் பிரகிருதிகளைப் பற்றிய அறிமுகம் தேவையா என்ன?

இந்த இந்துத்துவாக்களின் பதிவுகளை திரட்டும் ஒரு இடத்தில் இஸ்லாத்தை தாக்கும் ஒரு கிருஸ்துவ பதிவை சேர்த்து வைத்திருக்கும் மர்மம் என்ன? (படம் 3)
இந்த அய்யர்வாளுக்கு ஏன் இந்த வேலை? என்ன வேஷம் போட்டாலும் குடுமியை மறைக்கத் தெரியலையே!

Friday, March 21, 2008

கணவன் மனைவியான அண்ணன் தங்கை!

ஜெர்மானியரான பாட்ரிக் ஸ்டூபிங் தனது தங்கையான சூஸனை காதலித்து மணமுடித்து 4 குழந்தைகளையும் பெற்றெடுத்திருக்கிறார். ஜெர்மானிய சட்டப்படி இது குற்றம் என்பதால் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பாட்ரிக், தாங்கள் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.



அவரது தங்கை-மனைவி சூஸனிடம் 'இந்தச் செயல் தவறு என்று நீங்கள் உணரவில்லையா?' என்று கேட்டபோது 'இல்லை' என்று அவர் தலையாட்டி மறுத்தார். 'நாங்கள் சேர்ந்து வாழவே விரும்புகிறோம்' என்று அவர் தெரிவித்தார்.



இந்த பதிவுக்கு தொடர்பில்லாத இன்னொரு தகவல்: ஜெர்மானியரும் பார்ப்பனரும் ஒரே ரத்தம்!



A German brother and sister are challenging the law against incest so that they can continue their relationship free from the threat of imprisonment.
Patrick Stübing, an unemployed locksmith, and his sister Susan have had four children together since starting a sexual relationship in 2000. Three of the children are in foster care, and two have unspecified disabilities.
The couple, who live near Leipzig, grew up separately and only met many years later. Their supporters say they will fight until incest is no longer regarded as a criminal offence, arguing that the law is out of date. They say it harks back to the racial hygiene laws of the Third Reich and should be overturned in favour of freedom of choice and sexual determination. Detractors insist that incest should remain a social taboo, largely because of the risks linked to inbreeding and the imbalance in social relations it inevitably causes.
A film and a book are planned about the Stübings, who remain defiant about breaking one of the few remaining sexual taboos in western society.
Mr Stübing, 30, has spent over two years behind bars for having sex with his sister and faces another prison sentence if paragraph 173 of the legal code is not overturned. His sister has never been imprisoned because she has always been tried as an adolescent.
The couple were born into the same family but Patrick was already living apart from his mother when his sister was born. After a life spent in children's homes, Mr Stübing was reunited with his mother, Annemarie, in Leipzig in 2000, when he met his sister for the first time. Six months after the reunion, their mother died of a heart attack.
The siblings fell in love, and their son Eric was born in 2002, followed by Sarah, now 4, Nancy, 3, and Sofia, 1. Two of the children are known to have disabilities, although it is not known whether they are a result of inbreeding, or because they were born prematurely. All the children except Sofia have been taken into foster care. Mr Stübing has since been sterilised.
Speaking to a German newspaper, Mr Stübing said the couple decided to have more children after the authorities took their first-born away. "The younger children might not have been born had they not taken the first one from us," he said. "We just want to make sure that we don't lose everything again."
Ms Stübing shook her head when asked if the couple felt guilty about their relationship. "No," she said. "I just want us to be able to live together."
Addressing the issue of two of the children's disabilities, Mr Stübing would only say: "It's true that Eric has epilepsy, but otherwise everything's fine with him."
"Our aim is to get paragraph 173 abolished," Ms Stübing said. "And I would like to have my children back again."
Germany's courts have not doubted the earnest nature of the relationship. But in German law sex with a close relative is forbidden and punishable by up to three years in prison.
Endrik Wilhelm, the couple's lawyer, said they had little choice but to fight the existing law. "It's clear, if you face jail, and the only way you can prevent this is by overturning the law, that's what you will try to do," he told the Guardian.
He said that the couple were causing no harm to others. "Everyone should be able to do what he wants as long as it doesn't harm others."
Incest is not illegal in many of Germany's neighboursing countries, he said. The law was a "historical relic".
Napoleon abolished France's incest laws in 1810. Neither is it a crime in the Netherlands, Luxembourg, Belgium, Portugal or Turkey. Japan, Argentina and Brazil have also legalised it in recent years.
Incest is forbidden in Britain, where the law was extended in 2002 to include not just those with blood ties, but also step-parents and their children and in cases of adoptions.
But opponents of changing the law say it exists for a good purpose.
"When siblings have a child together, there is only a 50% chance that it will be healthy when it is born," said Jürgen Kunze, professor of human genetics at Berlin's Charite hospital.
Germany's constitutional court is expected to decide on the Stübings' appeal in four to six weeks' time.

http://www.guardian.co.uk/world/2007/feb/27/germany.kateconnolly

Monday, March 17, 2008

கிருஷ்ணனின் மனைவி ருக்மணியின் சக்காளத்திகள்! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

இந்து மதம் என்றால் எத்தனை எத்தனையோ விமர்சனக் கணைகள் அதன்மீது!அனைத்திற்கும் காரணங்கள் உண்டு. அடிமுட்டாள்தனத்தில் அதன் மாளிகை எழுந்திருக்கிறது. அதன் அங்குலம் அங்குலமான இடம் ஒவ்வொன்றுமே ஆபாசத்தில் திளைத்து, அநியாயத்துக்குக் கண்களைச் சிமிட்டிக் கொண்டு இருக்கிறது.

விபச்சாரத்தைத் தொழிலாளக் கொண்டவர்கள் கூட அதனிடம் சலாம் வைத்து புறமுதுகிட்டு ஓடவேண்டும்.

ஒழுக்கம், அறப்பண்பு, நன்னடத்தை இவற்றை மக்களிடம் பரப்பிய கவுதமப் புத்தர் அவர் உருவாக்கிய அமைப்பு சீலங்கள் அத்தனையையும் தவிடு பொடியாக்கிட இந்து மதம் மிகவும் கேவலமான ஒரு கலாச்சாரப் படைப்பாகக் ``கிருஷ்ண அவதாரத்தை’’க் கற்பித்தது.

இது பற்றி என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா இவ்வாறு கூறுகிறது.

``புத்த பிரான் அற மொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ண அவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப்பட்டது. காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே ``கிருஷ்ண லீலா’’ கதையின் நோக்கம்.

புத்தர் கொள்கைகளின் சொல் வாக்கை ஒழிக்கவே கிருஷ்ண அவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது’’ என்று மிகச் சரியாகக் கணித்தது என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.

இந்த வகையில் இன்றைய சின்னத்திரை, பெரிய திரை ஆபாச ஆலமரத்துக்கு விதையே இந்து மதத்தின் கிருஷ்ண அவதாரம்தான்.

அண்ணல் அம்பேத்கர் எழுதிய ``ராமன், கிருஷ்ணன்-பற்றிய புதிர்கள்’’ என்ற நூலில் கிருஷ்ணனைப்பற்றி எழுதியவை இந்த இடத்தில் இணைத்துப் பார்க்கத்தக்கவை!

``கிருஷ்ணன் - இவன் ஒரு காமவெறியன். பல பெண்களுடன் உறவு கொண்டவன். ருக்மணி என்ற மனைவி இருந்தும், ராதா என்ற பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தான்.கிருஷ்ணனுக்கு எட்டு மனைவிகளும், 16,108 வைப்பாட்டிகளாம், 1.80 லட்சம் குழந்தைகளும் இருந்தனர்’’ (பக்கம் 338) என்று அறிஞர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைக் களவாடியதும், மரத்தின் உச்சியில் அமர்ந்து குளிக்கும் பெண்களின் உடல்களை இரசிப்பதும்தான் ஒரு கடவுள் வேலையா? இந்தக் கடவுளிடத்தில் பக்தி செலுத்துபவர்கள் எந்தத் தாக்கத்துக்கு, உணர்ச்சிக்கு ஆளாவார்கள்?

ஒரு பக்தை - அவருக்கு ஆண்டாள் என்று பெயர். கண்ணான அந்தக் கிருஷ்ணனைக் காதலனாக வரித்துக் கொண்டு வருந்தி வருந்தி எழுதிய பாடல்கள் தாம் எத்தனை! எத்தனை!! அதில் வழிந்தோடும் குடலைப் புரட்டும் ஆபாசச் சாக்கடையை எது கொண்டு சாற்றுவது!

திருப்பாவை மட்டுமல்ல - ஆண்டாள் ``நாச்சியார் திருமொழி’’ என்ற பக்திப் பாசுரத்தையும் `அருளி’யுள்ளார்.`கொக்கோகம்’ வெட்கித் தலை குனிய-வேண்டும். எடுத்துக்காட்டுக்கு இதோ ஒரு பாடல்:

``முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான்புணர்வதோர் ஆசையினால் - என்கொங்கை கிளர்ந்து குமைத்துகுதூகலத்து ஆவியை ஆகுலம் செய்யும்அங்குயிலே!’’

நாச்சியார் தன்னுடைய காதலனாகிய கண்ணனிடம் கொண்ட காதல் அவள் எண்ணப்படி நிறைவேறாமல் தாம் பட்ட உள்ளுணர்வோடு கூடிய துன்பத்தின் மிகுதியைக் குயிலிடம் கூறுவதாகப் பாட்டடிகள் அமைந்துள்ளன.

``நான் முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றிருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற்றிருந்தேன். கண்ணனாகிய காதலன் வந்து என்னை புணராமையால் இவைகளின் அழகையெல்லாம் இழந்தேன்.

கண்ணனைப் புணர வேண்டுமென்ற ஆசை மிகுதியால் என்னுடைய மார்புகள் மகிழ்ச்சியால் உந்தப் பெற்று, பெருத்து, உணர்ச்சி வசப்பட்டு என்னுடைய உயிரைத் துன்பப்படும்படிச் செய்கின்றது. இவைகளை அழகிய குயிலே கூறுவாயாக!

மேலும் நாச்சியார் பாடுகின்றார்:

கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோராச் சோர்வேனைக்
காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு
இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய் நானிருப்பேனே
என்னாகத்து இளங்கொங்கை
விருப்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புங்குதற்கு எனப்
பரிவுடைமை செப்புமினே!

இந்தப் பாட்டடிகளின் அருவருப்பை ஒரு பெண் வெளிப்படையாக இப்படிப் பாடுவாளா என்பதை எண்ணிப் பாருங்கள். பாட்டடிகளின் கருத்து பின்வருமாறு அமைகின்றது.

கண்ணனின் பிரிவுக்கு ஆற்றாமல் வருத்தம் மிகுந்து கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது. அக்கண்ணீர் மார்பின் முலைகளில் படிந்து முலைகளின் முனைகள் வழியாகத் துளித்துளியாக வழியும்படி வருத்தம் அடைகின்ற நான் காம நெருப்பால் சுடப்பட்டுத் தென்றலுக்கு ஆட்பட்டு துன்பமடைந்து இங்கிருப்பேன்.என் மார்பின் இளைய முலைகளை கண்ணன் விரும்பி நாள்-தோறும் என்னைக் கூடும்படி விருப்பங் கொண்டு நான் இங்கு இருப்பேன் என்று அவனிடம் சொல்லுங்கள் என்று பாடுகின்றார்.

எந்தக் கேடு கெட்ட பெண்ணும் தம் காம-வெறியை இப்படி வெளிப்படுத்துவாளா? சாக்கடையைச் சந்தனம் என்பதும், மலக்காட்டை மலர்க்காடு என்பதும் முடை நாற்றத்தை முல்லை மணவாசம் என்பதும் தான் பக்தியும் பார்ப்பனீயமும் அதன் ஒழுக்கமும் போலும்!

கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை
தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பி
வெறிந்து என்னழலைத் தீர்வேனே!

என்றும் பாடுகிறார் ஆண்டாள்!

அந்தரங்கத்தில் கூட நடக்க முடியாத ஆபாசச் சேற்றை அள்ளி எறிகிறார் ஒரு பெண் பக்தை.

இந்து மதத்தின் கடவுள்கள் அவற்றின் தோற்றம் நடப்புகள் என்று எடுத்துக் கொண்டாலும் எல்லாம் காட்டு விலங்காண்டித்தனமான விரகதாபத்தின் வெளியீடுகளும் வழியல்களும்தான்.`ஓம்’ என்னும் தாரக மந்திரமானாலும் சரி, சிவலிங்கம் என்று சொல்லப்படுவதானாலும் சரி எல்லாமே ஆண் - பெண் புணர்ச்சிகளை மையப்படுத்தும் சமாச்சாரங்கள்தாம்.

கடவுளே மோகினி அவதாரம் எடுப்பது, அந்த மோகினியைக் கண்டு இன்னொரு முழு முதற்கடவுள் சபலப்படுவது - கூடுவது - பிள்ளையைப் பெறுவது என்கிற தன்மையில் இந்து மதம் என்ற குட்டை சேறும் சகதியுமாக, கும்பியும் நாற்றமுமாக மனித நாகரிகத்தில் மூக்கைத் துளைக்கிறது.ஒழுக்கத்தை ஒழித்து, மனிதனின் மலிவான உணர்வுகளைத் தூண்டி மீன் பிடிப்பது தான் இந்து மதத்தின் அணுகுமுறை.

கோயில் தேர்களிலும், கோபுரங்களிலும் செதுக்கப்பட்டு இருக்கும் ஆபாசத்தை முதலமைச்சர் மானமிகு - மாண்புமிகு கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டினால் அவற்றை ஏன் பார்க்கிறீர்கள் என்று இந்து முன்னணியினர் கேட்டது சமாதானமாகி விடுமா?பார்ப்பதற்காகத்தானே செதுக்கி வைத்துள்ளீர்கள்? கோயிலுக்கு மக்களை ஈர்ப்பதற்கு இந்தக் கேவலமான உபாயத்தைத்தானே கையாண்டிருக்கிறீர்கள். அதனைச் சுட்டிக்-காட்டினால் வெட்கப்படுவதற்குப் பதில் வெட்டிப் பேச்சுப் பேசுவதில் நியாயம் இருக்க முடியுமா?

இந்து மதத்தின் இதிகாசங்களும், புராணங்களும் கூட இதே கெதியில்தான் - சுருதியில்தான். மகாபாரதத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது வாசகர் ஒருவர் `ஹிந்து’ நாளேட்டில் எழுதிய (17.12.1988) ஒரு கடிதம் தான் நினைவிற்கு வருகிறது. சென்னையைச் சேர்ந்த டி.அய். சுந்தரம் என்பவர்தான் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.தர்மபுத்திரா (யுத்திஸ்த்ரா), வாயு புத்ரா (பீமர்) ஆசியோடு குந்திக்கு, தர்மர் ஆகியோர் பிறக்கிறார்கள்.தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது, உடனே குழந்தைகள், அந்தப் பிறப்புப்பற்றி சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

அது தெய்வீக சம்பந்தப்பட்டது; எனவே, அதுபற்றி எல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக் கூடாது என்று தான் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?

நாம் நமது குழந்தைகளிடம் திரவுபதி 5 ஆன்மிக சக்திகளின் சின்னம்; எனவே, 5 பேரை மணந்து கொண்டார் என்று கூறினால் அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்களா?

அல்லது கட்டிய மனைவியை, மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் `புருஷ லட்சணம்’ என்று அவர்களிடம் கூற முடியுமா?

நமது காலத்தைவிட இக்காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். 3000, 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இப்போது அவர்களிடம் விவரித்து, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.எல்லாவற்றுக்கும் தெய்வீக முத்திரையைக் குத்தி, நாம் குழந்தைகளிடம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க முடியாது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதத் தொடர் எனவே, நள்ளிரவு சினிமாக்களை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்புவது நல்லது.- இவ்வாறு அந்த வாசகர் தமது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

ஹிந்துவில் கடிதம் எழுதியவர் ஒன்றும் பெரியார் தொண்டரல்லர். கருஞ்சட்டை வீரருமல்லர் - பக்தர்தான் - அதுவும் `ஹிந்து’ ஏட்டில் எழுதியிருக்கிறார் என்பதைக் கவனிக்கவேண்டும். இந்துக்கள் இதற்கெல்லாம் என்ன பதிலை வைத்துள்ளார்கள்?

ஒருத்திக்கு ஒருவன் என்கிற உன்னத வாழ்வு தமிழர்களுக்கு உள்ளது.அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பது ஆரியப் பார்ப்பனர்களுடையது.

ஆரியர்களின் கலாச்சார சின்னம் தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி வகைகள்! தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் தைப் பொங்கல் நாள் என்னும் வேளாண்மை விழா - அவர்கள் வேறு - நாம் வேறு - வேறுபடுத்திப் பாருங்கள் - நம் வேரின் ஆழம் என்ன என்று தெரியும்!

http://unmaionline.com/20070102/20.htm

Wednesday, March 12, 2008

மலேசியா தேர்தலும் சந்துல சிந்து பாடும் பார்ப்பனர்களும்!

"உன் பணம் பணம் என் பணம் பணம் உன் பணம் என் பணம்"

அப்படின்னு பிரபு தேவா நடிச்ச ஒரு படத்திலே, பாட்டு ஒன்னு வரும். அதைப் போலவே,

"என் வெற்றி...என் வெற்றி..
உன் வெற்றி...என் வெற்றி...
என் தோல்வி..உன்தோல்வி...
உன் தோல்வி...உன் தோல்வி.."

என்றுப் பாடுவது ஒரு குழுவின் வழக்கம். அந்தக் குழு யார் என்று நான் சொல்லித் தான் தெரியுனும்மா. வேற யார், பார்ப்னயீயத்தை ஆதரிக்கும், பார்பனர்கள்.

வழிப்பாடு உரிமைக் கேட்டால்,"நீ கால்...நான் முகம்...என்ன செஞ்சாலும் உள்ளே விட மாட்டேன்" (நீ காற்று , நான் மரம் என்ற ராகத்தில் வாசிக்கவும்..), என்றுப் பாடுவார்கள். ஆனால், அவர்களுக்குத் தேவை என்றால், பொந்து மதம் (நன்றி : மீண்டும் லக்கிக்கு), இந்துக்கள் என்று ஒரு குழுவாக உருவகப்படுத்தி, மாய் மாலம் செய்வார்கள்.

இப்பக் கூட பாருங்க, நம்ம ஜடாயு ஐயா, மலேசியாவில் இந்துக்களின் வெற்றி என்றுக் கூப்பாடு போடுகிறார். இந்துராப் என்ற அமைப்பின் கீழ் ஒன்றினைந்து போராடியதாகவும், அதனால் மட்டுமே வெற்றி என்றும் கூவுகிறார். மலேசியாவில் நீங்க, பொந்து மதம் இல்லை, வேற எந்த மதமாக இருந்தாலும், கவனிக்கப்பட்டியிருக்க மாட்டீங்க. அவர்கள் முன்னிறுத்தியது மலாய் இனம். நீங்கள் தமிழர்/இந்தியர் என்றக் காரணத்திற்காகத் தான் புறக்கணிக்கப்பட்டார்கள்.

இதே, பொந்து மதத்தை வைத்தே தான் இம்முறை மக்களை திசை திருப்ப முயன்றார்கள், ம.இ.கவினர். எப்படித் தெரியும்மா, இந்துராப் என்பதை எதிர்க்க,"ஓம் சக்தி" என்ற முழக்கத்துடன், களமிறங்கி, வெளியீடுகள் வந்தன. (பார்க்க : காணொளி ). ஆனால், மக்களுக்கு மதம் சோறு போடும்மா.

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்மெய்வருத்த கூலி தரும்"என்பதை உண்ர்ந்த தமிழர்கள், தமிழர்கள் (இந்தியர்களில் 90% தமிழர்கள் தான்) விழிப்படைந்தார்கள். "மக்கள் சக்தி" என்று ஒன்றுக் கூடினார்கள். இம்முறை ஒவ்வொரு தமிழனும், மக்கள் சக்தி என்று முழங்கியதை, மலாய் இனத்தை ஆதரித்தக் கட்சிகள், சீனர்களுக்கான கட்சிகள் கூட, இந்த மக்கள் சக்தி முழக்கத்தை சுவரொட்டிகளில் தமிழிலே வெளியிட்டு, தமிழர்களிடையே ஆதரவைப் பெருக்கினார்கள்.

போராட்டம், சீனர்களையும், தமிழர்களையும் ஒதுக்கி, மலாய் இன மக்களை மட்டும் முன்னிறுத்திய அரசாங்கத்திற்கு எதிராக. தனியொருவராக தமிழ் இன மக்கள் இதை வென்று விடவில்லை.

டத்தோ சாமி வேலு, இந்தப் பிரச்சனைகள் வருவதற்கு முன், இந்தியாவில் ஒரு அதி முக்கியமான பார்வையாளராக வலம் வந்தவர். தமிழர்களுக்கெதிரான செயல்களுக்கு இன்னமும் துணைப் புரிகிறார் என்றுச் சொன்னவுடன், தமிழக முதல்வர் அவரை சந்திக்ககூட மறுத்துவிட்டார்.

இந்நிலையில், ஜடாயு ஐயா, என்ன சொல்லுறார்..

"மலேசியாவில் இருந்து ஒரு நண்பர் அனுப்பிய மடல்:இன்று காலைச் செய்தி,டத்தொ சாமி வேலு, மலேசிய அரசின் ஒரே தமிழ் மந்திரி,தேர்தலில் தோற்றுப் போனது தான்.தன் சுகத்துக்காக, பதவிக்காக, தன் மக்களைக்காட்டிக் கொடுக்கும் துரோகப் பரம்பரையைஅன்றைய ஜஸ்டீஸ் பார்ட்டியில்பார்த்தோம். இன்றைய கழகங்கள், தமிழ் நாட்டுகம்யூனிஸ்ட் வகையறாக்களிடம்பார்த்தோம் பார்த்து வருகிறோம். இவர்களுக்கு அழிவுகாலம் வராது போலிருக்கிறது.ஆனால், சாமி வேலு தோற்றதில் எனக்கு பரம சந்தோஷம்.அவருக்கு தமிழ் நாட்டில்மரியாதை தொடுத்தது அங்குள்ள உலகத் தமிழ் ஈனத்தலைவர் "

இந்த சந்துல சிந்துப் பாடுறதுன்னு கேள்விப்பட்டியிருக்கோம். ஆனா இப்ப மறுபடியும் பார்க்கிறோம்.

இறுதியாக சாமி வேலுவின் தோல்விக்கு மகிழ்கிறார். இவரின் காழ்புணர்ச்சியயை/மகிழ்ச்சியயை மேலேக் கண்ட பிறகு, சாமி வேலுவின் தோல்விக்கு காரணம் ஒரு இந்துவாகத் தான் இருக்கும் என்று நீங்கள் எல்லாரும் நினைப்பீர்கள். அது தான் இல்லை.

சாமி வேலு தோற்றது, மைக்கேல் ஜெயக்குமார். பெயர் சொல்லுமே அவர் எந்த வித நம்பிக்கையாளர் என்று. அத்தோட விட்டுருவோமா, இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் சண்டை. என்று, மோதுகிற ஆடுகளின் ரத்ததைக் குடிக்கக் காத்திருந்து ஓநாய் போல, காத்துக் கிடத்த ஆர்.எஸ்.எஸ், முகத்தில் கரி, மறுபடியும் எப்படி பூசுனாங்க தெரியும்மா.

மைக்கேல் ஜெயக்குமார் நின்று போட்டியிட்டு வெற்றிப் பெற்றது, கெடிலான் எனப்படும் Parti Keadilan Rakyat. அதை தலைமை தாங்குபவர், அன்வர் இப்ராகின். ஒரு மலாய் இனத்துக்காரர். இசுலாமியர். இதில் ஒரு வேடிக்கை, அந்தக் கட்சியின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு, People's Justice Party . அந்தக் கட்சி முன்னிறுத்தும் முக்கியக் கொள்கை, அனைத்து மக்களையும் சமமாக பாவித்து, அரசு நடத்த வேண்டும் என்பதே.

ஆக, இந்த முறை தமிழர்கள் வென்றியிருக்கிறார்கள். மதம் தோற்றியிருக்கிறது.


தொடர்புடையச் சுட்டிகள் :-
1. மலேசிய மக்களின் போராட்டம் 1
2. மலேசிய மக்களின் பேரணி , கோரிக்கைகள்
3. மலேசிய தேர்தல் பார்வை
4. தமிழர்களின் வெற்றி
5. பார்ப்பனீயம்

நன்றி: TBCD

Saturday, March 8, 2008

கணவன் பொம்பளப் பொறுக்கியா இருந்தா மனைவி என்ன செய்யனும்?

பார்ப்பனர்களின் மதத்தில் பெண்ணுரிமை எப்படி பாதுகாக்கப் படுகிறது என்பதற்கு ஒரு சாம்பிள்.

"கணவன் துராசாரமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்த்ரீலோலனா யிருந்தாலும் நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்த்ரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது." (மநு: 5:154)

இன்னொரு சாம்பிள்.

"கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடியனாகவிருந்தாலும், நோயாளியாகவிருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவளுக்கு அலங்காரம், துணிமணிகள், படுக்கை இவற்றை கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது." (மநு: 9:78)

இதுமட்டுமல்ல.. பார்ப்பனர்களின் மதம் பெண்களைப் பற்றி எவ்வளவு உயர்ந்த அபிப்ராயம் வைத்திருக்கிறது தெரியுமா? இதோ..

"மாதர்களின் சுபாவமே மனிதர்கட்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும்." (மநு: 2:213)

இன்னொன்று..

"மாதர்கள் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்." (மநு 9:15)

இவங்களோட அம்மா, தங்கை, மனைவி, மகள் எல்லாம் மாதர்கள் இல்லையா?

இதையெல்லாம் விட படு கேவலமான ஒரு'கொள்கை'யும் மநுவில் இருக்கிறது.

"தாய், தங்கை, பெண் இவர்களுடன் தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது" (மநு: 2:215)

இதுக்கு என்ன காரணம்? தாய், தங்கை, மகளாக இருந்தால் கூட தனியா இருக்குறப்போ இவனோட மனசை அவங்க கெடுத்துடுவாங்களாம். அட கேடுகெட்ட ஜென்மங்களே.

மனைவியை வேற எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் பாருங்க.

"ஒருவன் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம்." (மநு: 9:52)

இன்னொன்று.

"பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாயிருந்தால், அப்போது அந்த ஸ்த்ரீ தன் கணவர், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஆகியவர்களுடன் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டு பண்ண வேண்டியது" (மநு: 9:59)

இதையெல்லாம் படிச்சுட்டு பார்ப்பன பெண்கள் தங்கள் வீட்டு ஆண்களின் முகத்தில் காரித்துப்பி தொடப்பக்கட்டையால அடிச்சு விரட்டுனா அதுக்கு நாம பொறுப்பில்லை!

Friday, March 7, 2008

இந்தியாவின் “பொது எதிரிகள்”

"எத்தனை சாட்சியங்கள் கொண்டு வந்தால் என்ன? எவ்வளவு ஆதாரங்களை எடுத்துக் காட்டினால்தான் என்ன? இத்தனை ஆண்டுகளாக நாங்களும் எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் எண்ணற்ற ஆதாரங்களை கண்டுபிடித்து காட்டிவிட்டோம். இந்த அரசமைப்புச் சட்டத்தில், இந்த அரசியல் சூழலில், ஒட்டுமொத்தமாக சீரழிந்திருக்கும் இந்த சமூகத்தில் எதற்கும் பயன் இருக்கப் போவதில்லை.''


குஜராத் கலவர வழக்குகளை தொடக்கத்திலிருந்தே கையிலெடுத்து, தீவிரமாகப் போராடி வரும் மனித உரிமையாளர் தீஸ்தா செடல்வாட், குற்றவாளிகளின் வாக்குமூலங்களை அண்மையில் ‘தெகல்கா' வெளியிட்டபோது வேதனையோடு சொன்ன சொற்கள் இவை.


‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக மிக வலுவான ஆதாரங்கள் (‘தெகல்கா' புலனாய்வு) வெளிவந்த போதும், அவர் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டாரே?' என்று படித்த - படிக்காத பாமரர்களால் சொல்லப்படுகிறது. ஆனால், பல்வேறு மாய்மாலங்களை செய்து தேர்தலில் வெற்றி பெறுவதாலேயே - அவர்கள் செய்த படுகொலைகள் எல்லாம் ‘சரி' என்றாகி விடுமா? அரசியல்வாதிகள் கிரிமினல்மயமாகி வருவதையும், தேர்தல்கள் அவர்களைப் புனிதப்படுத்துவதையுமே இது காட்டுகிறது. தேர்தல் அரசியல் கெட்டதிலிருந்து கழிசடைக்குச் செல்கிறது என்பதைத் தவிர, இதில் சொல்வதற்கு வேறொன்றுமில்லை.


விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சு.ப. தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டதற்கு நான்கு வரிகளில் இரங்கல் கவிதை ஒன்றை தமிழக முதல்வர் எழுதினார். உடனே பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அவர் மீது ஆவேசமாகப் பாய்ந்து, ஆட்சியையே கலைக்க வேண்டும் என்று கூக்குரலிட்டு பெரும் ஆர்ப்பாட்டத்தை காங்கிரசும் ஊடகங்களும் செய்தன. ஆனால், ஒரு பெரும் மதக் கலவரத்தைத் தூண்டி 2000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ஒரு பயங்கரவாதியே முதலமைச்சராகப் பொறுப்பு வகிப்பதை (நரேந்திர மோடி) கண்டித்து - ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கோடியில் ஒருவர் கூட குரல் எழுப்பவில்லையே! இன்னும் சொல்லப் போனால், மோடி காங்கிரசுக்கு எதிர்நிலையில் இருப்பவர்; கருணாநிதியோ கூட்டணியில் அங்கம் வகிப்பவர்.


பார்ப்பனிய சமூக அமைப்பிற்கு குந்தகம் விளைவிக்காமல் இருந்தால் ஆளும் வகுப்பு அமைதி காக்கும்; குந்தகம் விளைவித்தால் பதறும்!


இந்திய விடுதலைக்கு முந்திய காலகட்டத்தில், காங்கிரஸ் மாநாடுகளின் ஒரு பகுதியாகத்தான் இந்து மகாசபை மாநாடுகள் நடத்தப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் காங்கிரசும் தனது இந்துத்துவ முகத்தை அவ்வப்போது வெளிக்காட்டிதான் வந்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரத்தை முன்வைத்து அரசியல் ரீதியாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக, இன்று வரை வலுவான நெருக்கடியை காங்கிரஸ் உருவாக்கியதில்லை. சொல்லப்போனால், பாரதிய ஜனதா கட்சி அவற்றை தனது சாதனையாகப் பறைசாற்றிக் கொள்ளும் சூழல்தான் நிலவுகிறது. இதனால்தான், குஜராத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ""குஜராத் பரிசோதனையை நாடெங்கும் நடத்துவோம்'' என பாரதிய ஜனதா இறுமாப்புடன் கூறுகிறது.


அரசியல் கட்சிகள் அமைதி காக்கின்றன. ஊடகங்களோ ஒரு படி மேலே சென்று, இது மோடிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தியிருக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், அதையே நாடெங்கும் செயல்படுத்துவோம் என்று பாரதிய ஜனதா கட்சி சொல்வதாகப் பூசி மெழுகுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு பரிசோதனை முயற்சியை இந்துத்துவ அமைப்புகள் தமிழகத்தில் தொடங்கிவிட்டன என்பதற்கு கோவை கலவரமும், குண்டு வெடிப்புமே சான்று.


தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை நகருக்கு அத்வானி வரும் சூழலில்தான் கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அது அத்வானியை குறிவைத்து நிகழ்ந்ததாகவே பாரதிய ஜனதா கட்சியும் ஊடகங்களும் கூறின. ஆனால் அன்றைய முதல்வர் கருணாநிதி அதனை மறுத்து, ""குண்டு வெடிப்பு உள்ளூர்ப் பிரச்சினையின் வெளிப்பாடே'' என அறிக்கை வெளியிட்டார். உடனடியாக யாரும் கைது செய்யப்படவில்லை.


ஆனால் அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. உடனடியாக குண்டு வெடிப்பு வழக்கில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. உள்ளூர்ப் பிரச்சினை என்று கூறிய அதே முதல்வர் கருணாநிதி, இந்த குண்டு வெடிப்பு அத்வானியை குறி வைத்தே நடந்தது என அறிவித்தார். சடசடவென பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். "அல் உம்மா' இயக்கம் தடை செய்யப்பட்டது. இதில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய செய்தி என்னவெனில், இதுவரை கோவை கலவரத்தில் ஈடுபட்டதற்காக எந்தவொரு இந்து அமைப்பும் தடை செய்யப்படவில்லை.


ஆக, இந்திய அரசியலில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் இந்துத்துவத்தை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கின்றன; அல்லது அப்படி ஆதரிக்கும் கட்சிகளின் தயவு வேண்டி அக்கட்சிகளின் இந்துத்துவ செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கின்றன. அதற்கும் மேலாக, அவர்களைப் பாதுகாக்கவும் செய்கின்றன. ஆனால் அதே நேரம், இந்துத்துவத்தின் அடிப்படையில், இந்து மதத்தின் அடிப்படையில் ஒன்றிணைப்பது ஒன்றே இந்து மதத்தையும், அதன் மூலமே சாதியத்தையும் நிலை பெறச் செய்ய முடியும் என்பதை இந்துத்துவவாதிகள் தெளிவாக அறிந்தே வைத்துள்ளனர். இதன் காரணமாகவே "இந்துக்களாக ஒன்றுபடுங்கள்'' என்ற முழக்கத்தை முன் வைக்கின்றனர்.


அந்த முழக்கத்தின் உண்மையான பொருள் ""இந்துக்களாக ஒன்றுபடுங்கள்; சாதிகளாக வேறுபடுங்கள்'' என்பதே!


இந்துக்களாக ஒன்றுபடுவதற்கு செய்ய வேண்டிய அத்தனையையும் திட்டமிட்டு செயல்படுத்துகின்றனர். அதன் ஒரு திட்டமே, மாற்று மதத்தினரை எதிரிகளாக முன்னிறுத்துவது. பொதுவான எதிரி என்று அடையாளம் காட்டுவதன் மூலம் மக்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக அத்திசையில் திருப்பி, மக்களை சிந்திக்க விடாமல் செய்வதே அவர்களின் நோக்கம். இந்துக்களுக்கான எதிரிகளாக மட்டுமின்றி, இந்தியாவிற்கே அவர்கள்தான் எதிரிகள் என்று கூறுவதன் மூலம் - இதனை எதிர்ப்பவர்கள் அனைவரையும் தேச விரோதிகளாக சித்தரிக்க முடிகிறது.


உண்மையில் அவர்களின் நோக்கம் முஸ்லிம்களை ஒழிப்பதோ, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதோ அன்று. மாறாக முஸ்லிம்களை பலிகடாவாக்கி அதன் மீது இந்துத்துவத்தை உறுதியாகக் கட்டமைத்து, சாதியப் படிநிலை சமூகத்தை நிலை பெறச் செய்வதே. இந்த செயல் திட்டத்திற்கு இந்நாட்டின் சிறுபான்மை மக்களை பொது எதிரிகளாக சித்தரிக்கின்றனர். அந்த இலக்கினை நோக்கியே தங்களின் அடுத்த நகர்வை ஒரிசாவில் தொடங்கியிருக்கின்றனர்.


குஜராத் கலவரமோ, பாபர் மசூதி இடிப்போ திடீரென்று ஒரே நாளில் நடந்த நிகழ்வு அல்ல. பல காலமாக இந்த நிகழ்வை நோக்கிய திட்டமிடல்களை அவர்கள் செய்தே வந்திருக்கின்றனர். திட்டமிடுதல் என்பது அந்த நிகழ்வை எப்படி நடத்துவது என்பது மட்டுமல்ல. அதைவிட முக்கியமாக, அந்நிகழ்விற்கான எதிர்வினைகளை மழுங்கடிப்பது. அதிலும் குறிப்பாக மக்கள் மத்தியில் இதற்கான ஆழமான எதிர்வினைகள் எழாத வண்ணம் இந்துத்துவ நஞ்சை லாவகமாக விதைத்து வந்துள்ளனர்.


குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு எத்தனை ஆழமானது என்பது கட்டுரையின் முதல் பகுதியிலேயே சொல்லப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்குவதோ, முஸ்லிம்களுக்கு பொருட்களை விற்பதோ, முஸ்லிம்களுக்கு வீட்டை வாடகைக்கு விடுவதோ, முஸ்லிம்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பதோ – இதுபோன்ற எந்த கலந்து பழகும் செயல்களுமே அங்கு வேறாகப் பார்க்கப்படுகின்றன.முஸ்லிம்களுமே இந்துக்கள் தங்களிடம் வந்து உறவாடுவதை சந்தேகத்தோடும், அச்சத்தோடுமே பார்க்கும் நிலையில் உள்ளனர். இது நிச்சயமாக கோத்ராவிற்குப் பின் அல்ல; அதற்கு முன்பே இந்நிலை நிலவியதால்தான் கோத்ரா சாத்தியமானது என்பதுதான் முக்கியமான உண்மை. அத்தகையதொரு மனநிலைக்கு மக்களை நகர்த்துவதில் பன்னெடுங்காலமாக திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகிறது. இது போன்ற கண்ணுக்குத் தெரியாத நச்சுப் பரப்பல் நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டுதான் உள்ளன.


இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்த பொழுது, ஜெயப்பிரகாஷ் நாராயண் அதனை எதிர்த்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து மக்கள் இயக்கம் கட்டினார். அதற்கு ஆதரவு கேட்டு அவர் காமராசரை சந்தித்த போது, காமராசர் அவரிடம் கேட்ட கேள்வி மிக ஆழமானது: “ஏன் உங்கள் போராட்டத்தில் ஜன சங்கத்தையும் இணைத்துக் கொண்டுள்ளீர்கள்? இந்த மதவாத சக்திகள் பல்வேறு வடிவங்களில் மக்களிடம் வந்தபோதும் மக்கள் அவர்களை நிராகரித்து விட்டனர்.ஆனால், அவர்கள் அங்கீகாரம் வேண்டி இன்று உங்கள் பின்னால், உங்கள் தியாகத்திற்குப் பின்னால் நின்று வர முயல்கிறார்கள். மதவாத சக்திகளை வளர்த்து விட்டீர்களானால், அதற்கான விளைவை நமது அடுத்த தலைமுறையினர் அனுபவிக்க வேண்டிய நிலை வந்துவிடும். அதனால் அவர்களை விலக்கியே வையுங்கள்'' என்றார்.


இன்றும் அதே நிலை நீடிக்கிறது. அவர்கள் பல்வேறு வடிவங்களில் நம்முன் வந்து கொண்டே உள்ளனர். ஈழத் தமிழர்களுக்காக உணவுப் பொருட்கள் திரட்டுகிறார்கள்; மலேசிய தமிழர்களுக்காக உருகுகிறார்கள். இவையெல்லாமே அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றபோடும் முகமூடிகளே. அதிலும் அவர்கள் மிகத் தெளிவாகவே இவற்றை மதப்பிரச்சனையாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.


நரேந்திர மோடி மிகத் துணிச்சலாக தமிழகத்திற்கு வருகிறார். முன்னாள் முதல்வர் அவருக்கு விருந்தளிக்கிறார். தொகாடியா ராமேசுவரத்திற்கு வந்து மாநாடு நடத்துகிறார். அனைவருக்கும் சூலம் அளிக்கிறார். இவர்கள் வந்து செல்லும் வரை தமிழக அரசு தனது காவல் துறை மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. உச்சக்கட்டமாக, தமிழக முதல்வரின் தலையை வெட்ட வேண்டுமென சொல்லியதற்குக் கூட பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை.


ஆங்கில கால்வாய் என்பது போல, சேது கால்வாய்த்திட்டத்திற்கு "தமிழன் கால்வாய்' எனப் பெயரிட வேண்டும் என தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துக் கொண்டு காத்திருக்க, எந்தவித வேண்டுகோளும் வைக்காமல், "ராமர் சேது கால்வாய்' என்று தங்கள் விருப்பத்திற்கான சொல்லாடலை மிக எளிதாகப் பரப்ப இவர்களால் எப்படி முடிந்தது? பெரியார் பிறந்த மண்ணில் மதவாதத்திற்கு இடமில்லை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று பெரியாரையே அவமதிக்கும் துணிச்சல் அவர்களுக்கு வந்திருக்கிறது. அதிலும் பெரியாரின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் ஆட்சியிலேயே இதனை அரங்கேற்றி உள்ளனர். பெரியாரை அவமதித்தவர்களுக்கும் அதனை எதிர்த்தவர்களுக்கும் "சமத்துவமாக' தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்படுகிறது.


தமிழகம் கண்டிராத பிள்ளையார் ஊர்வலங்கள் நடப்பதும், ஆண்டுதோறும் அதில் பங்கேற்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிலும் குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாவதும் தற்செயலானது அல்ல. ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் ஊர்வலங்களை முஸ்லிம்கள் வாழும் பகுதி வழியாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று இந்து அமைப்புகள் அடம்பிடிப்பதும், அந்த வாரம் முழுவதும் நகரமே ஒரு வித பதட்ட நிலையில் இருப்பதும், காவல்துறையினரின் அணிவகுப்புகள் நடப்பதும் தமிழகம் இதற்கு முன்பு கண்டிராதவை. சென்னை நகரில் மட்டுமே நடந்த அந்த ஊர்வலங்கள், ஆண்டுதோறும் விரிவுபடுத்தப்பட்டு பல நகரங்களிலும், சின்னஞ்சிறு ஊர்களிலும் நடக்கத் தொடங்கியுள்ளன.


ஓர் அரசியல் கட்சியாக தமிழகத்தில் வேரூன்றி பலம் பெறாத நிலையிலேயே அவர்களால் தமிழகத்தில் இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த இயலுமெனில், அவர்களின் திட்டமிட்ட ஊடுருவலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இனியும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், பின்னர் அவர்கள் தங்கள் பரிசோதனை முயற்சியில் வெற்றி பெற்ற பிறகு நாம் வேதனையோடும், பெரியாரின் மண்ணில் இத்தகைய மதவாதத்திற்கு இடம் கொடுத்ததற்காகவும் அவமானத்தில் தலை குனிந்தே நிற்க வேண்டும்.



நன்றி: பூங்குழலி - தலித் முரசு