Showing posts with label சாதி. Show all posts
Showing posts with label சாதி. Show all posts

Monday, March 17, 2008

கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல பார்ப்பனர்கள் ஏன் கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை?

முன்னுரை: இஸ்லாம் மத இணைய தளங்களில் 'மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்' என்ற வசதியை செய்து வைத்துள்ளன. தமிழில் கூட இதுபோல நிறைய இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் இஸ்லாம் மதம் பற்றிய மாற்றுமதத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். கிருஸ்துவ மதம் பற்றி இப்படிப்பட்ட இணைய தளங்கள் தமிழில் இல்லையே தவிர ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான தளங்கள், புத்தகங்கள் உள்ளன.

ஆனால், இதுப்போன்ற வசதி பார்ப்பன ஹிந்துத்துவ கொள்கைகளைப் பற்றி மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா? அந்த பார்ப்பன மனுதர்ம கொள்கைகளைப் பற்றி கேள்விக் கேட்டு - விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்).

ஆனால் இணையங்களில் பார்ப்பனர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? கிருஸ்துவ பெயரை வைத்துக் கொண்டு இஸ்லாம் மதத்தை திட்டி எழுதுகிறார்கள். இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு கிருஸ்துவ மதத்தை திட்டி எழுதுகிறார்கள். இந்த இரு மதத்தினரும் சண்டை போட்டுக் கொள்வதை தாம் பார்த்து ஆனந்தமடைய வேண்டும் என்ற கேடுகெட்ட நோக்கமே இதன் காரணம். மேலும் பார்ப்பனர்கள் புனைப்பெயர்களின் பின்னே ஒழிந்து கொண்டு பெரியாரை திட்டுகிறார்கள். ஆபாச கதைகளை எழுதி பதிவேற்றுகிறார்கள். மாட்டிக் கொண்டால் காலில் விழாத குறையாக கெஞ்சி கேவலப்பட்டுப் போகிறார்கள். ஆனால், முஸ்லீம்கள் கிருஸ்துவர்கள் செய்வது போல தமது பார்ப்பன மதத்தின் கொள்கைகளை விளக்கி இவர்கள் இணையத்தில் எழுத மாட்டார்கள். அந்த கொள்கைகளைப் பற்றி கேள்விகள் வந்தால் அதற்கு பதில் சொல்ல மாட்டார்கள். காரணம் என்ன?

ஏன் இஸ்லாமியர்கள் கிருஸ்துவர்கள் போல பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? பார்ப்பன மனுசாஸ்திர கொள்கைகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளனவா? பார்ப்பன கேள்வி பதில் தளங்கள் உள்ளனவா? பார்ப்பனர்கள் பதில் சொல்லாமல் ஒளிந்துக்கொள்கிறார்களா?

"இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை" யார் யார் நடத்துகிறார்கள் என்று இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும், தமிழ் நாட்டிலுள்ளவர்களையும் கேட்டால், பெரும்பான்மையாக மாற்று மதத்தவர்களும் உடனே பதில் சொல்லிவிடுவார்கள். அதாவது, உலக அளவில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் நடத்துகிறார். அதே போல, தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நிகழ்ச்சியாகிய உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியை திரு பி. ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இந்த விவரங்கள் எல்லாருக்கும் தெரியும், இன்னும் பல நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருக்கின்றன.

கிறிஸ்தவ போதகர்கள், ஊழியர்களின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், உடனே குறைந்தது 10 பேரின் பெயரை அதிகமாக சிந்திக்காமலேயே சொல்லிவிடுவார்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் அதிகம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடதுவதில்லை என்றாலும் மாற்று மதத்தவர்கள் கேட்கும் கிறிஸ்தவ கேள்விகளுக்கு பதிலளிக்க நிறைய இணைய தளங்கள் இருக்கின்றன.

இஸ்லாமியர்களும் கிருஸ்துவர்களும் கேள்வி பதில் வசதி செய்து பதில் கொடுக்கும்போது, ஏன் பார்ப்பனர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை? இந்த கேள்விக்கான பதிலை இனி பார்ப்போம். பார்ப்பன சகோதரர்கள் இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மேல் கோபப்படவேண்டாம், நான் எழுதுவதில் யதார்த்தம் உள்ளதா இல்லையா என்பதை சிந்தியுங்கள்.

பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தாததற்கு 6 காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த காரணங்களை மேலிருந்து கீழாக (Count Down 6 to 1) ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

காரணம் 6. இன்று உலகில் நிலவும் சமூக அவலங்களுள் மிக அசிங்கமானவை சாதிப் பிரிவினையும் தீண்டாமைக் கொடுமையுமே. இவ்விரண்டிற்கும் ஆணி வேராக இருப்பது பார்ப்பனர்களின் மனுசாஸ்திர கொள்கைகளே. முழு உலகமும் சேர்ந்து எதிர்த்தாலும் பார்ப்பனர்கள் சாதிப்பிரிவினையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அம்பேத்கர், பெரியார் போன்றோரெல்லாம் சாதிப்பிரிவினை என்ற இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க பாடுபட்டார்கள்தான். ஆனால் அவர்களெல்லாம் பபர்ப்பனர்களல்ல. சாதிப்பிரிவினை ஒழிய வேண்டும் என்று உண்மையாய் பாடுபட்ட ஒரு பார்ப்பனரையாவது காட்ட முடியுமா? பாரதியார் கூட 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாப்பாவைப் பார்த்து பொய்தான் சொன்னார். பார்ப்பன சமுதாயமே நால்வர்ண சாதிப்பிரிவினையின் அடிப்படையில் கட்டியெழுப்பப் பட்டதுதான். இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் துணிச்சல் பார்ப்பனர்களுக்கு இல்லாததால் தமது கொள்கைகளைப் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியை அவர்கள் நடத்தவே மாட்டார்கள்.


காரணம் 5. பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றுக் கண்ணாக இருப்பவை பார்ப்பன வேதங்களே. மனுசாஸ்திரம் பெண்களை ஒரு கேவலமான பிறவிகளாக சித்தரிக்கிறது. பண்டைய காலத்திலிருந்தே வீடு, பசு, தோப்பு, தோட்டம் மாதிரி பெண்களையும் ஒரு பொருளாகவே (commodity) கருதி நடத்தி வருபவர்கள் பார்ப்பனர்கள். கோவிலுக்கு பொட்டு கட்டுதல், தேவதாசி முறை போன்ற பெயர்களில் பெண்களை போகப்பொருளாக நடத்தியவர்கள் இவர்கள். கேள்வி பதில் என்று வந்தால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வரும். அங்கு கேள்விகளைக் கேட்கும் மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணுரிமைவாதிகளுக்கு பார்ப்பனர்களால் பதில் சொல்லி மாளாது. எனவே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

காரணம் 4. பார்ப்பனர்கள் அக்கால அரசர்களை மூளைச் சலவை செய்து பொன்னையும் பொருளையும் ஏமாற்றி பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த ஈனச்செயலுக்கு உறுதுணையாக இருந்தது பார்ப்பனர்கள் வேதங்களை கற்றவர்கள் என்ற ஒரு தகுதி மட்டுமே. மங்கலம்' என்கிற பெயரில் முடிகிற ஊர்ப் பெயர்கள் இன்று நமக்கு வெறும் ஊர்ப் பெயர்களாக மட்டுமே தெரியும். ஆனால், அரசன் கண்ட ஒரு கெட்ட கனவுக்குப் பரிகாரமாக, நான்கு வேதங்களைக் கற்றவர்களுக்கு அவர்கள் விரும்புகிற பூமியைத் தானமாக தருகிற இடத்துக்கு 'மங்கலம்', 'அகரம்' என்கிற அடைமொழியுடன் பெயர் தந்தனர். அதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றைத் தேடிச் சென்றால்தான், நம் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தீவிரம் நமக்குப் புரியும். இதற்கு போட்டியாக மற்றவர்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகவே பார்ப்பனர்கள் தங்களைத் தவிர வேதத்தை படிக்கும் மற்றவர்களின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் அச்சுறுத்தி வைத்திருந்தனர். கேள்வி பதில் நிகழ்ச்சி என்றால் பார்ப்பனர்கலின் இந்த ஈனச்செயல்களெல்லாம் வெளிச்சத்திற்கு வந்து விடும். அதனால் பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

காரணம் 3. பார்ப்பனர்களின் வேதங்களும் சட்டங்களும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே அனுகூலமானவை. "அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412)" என்று சொல்கிறது மனுசாஸ்திரம். இது போன்ற, எண்ணற்ற, பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் சட்டதிட்டங்களை கொண்டதுதான் பார்பனர்களின் வேதங்கள். இதுபோன்ற சட்டங்களை இன்றைய சூழ்நிலையில் பார்ப்பனர்களால் எவ்வகையிலும் நியாயப் படுத்தவே முடியாது. கேள்வி பதில் நிகழ்ச்சியில் இவை பற்றி கேள்வி வந்தால் பார்ப்பனர்கள் எப்படி பதில் சொல்வார்கள்? அதனாலேயே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள்.

காரணம் 2. மேலும் பார்ப்பனர்களின் மனுசாஸ்திரத்தின்படி பார்ப்பனர்கள் என்ன குற்றம் இழைத்தாலும் அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையே விதிக்கப்பட வேண்டும். அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அவர்களுக்கு வேறு மாதிரியான கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379)

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281)

பார்ப்பான்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று சொல்லும் மனுசாஸ்திரம் மற்றவர்களுக்கு பாரபட்சமான தண்டனைகளை வழங்குகிறது. இதற்கெல்லாம் பார்ப்பனர்களால் ஒருக்காலும் பதில் சொல்லவே முடியாது. அதனாலேயெ பார்ப்பனர்கள் கேள்விபதில் நிகழ்ச்சிகள் நடத்தாமல் ஒளிந்து கொள்கிறார்கள்.

காரணம் 1. கிரிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அவரவர்கள் மதம் சிறந்தது என்று உளப்பூர்வமாக நம்புகிறார்கள். மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தை தழுவினால் அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையும் என்றும் அவர்கள் இறந்த பிறகு சொர்க்கம் செல்வார்கள் என்று அவர்கள் நம்புவதால் மற்ற மதத்தினருக்கு தங்கள் மதத்தின் சிறப்பியல்புகளை எடுத்துச் சொல்லி அவர்கள் தங்கள் மதத்தை தழுவும்படி அழைக்கிறார்கள். இது மற்ற மதத்தினர் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே கிரிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்துவதன்மூலம் தங்கள் மதத்தைப் பற்றி மற்றவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கிறார்கள். ஆனால் பார்ப்பன சாதியோ பிறப்பினால் வருவது. வேறு மதத்தை சேர்ந்தவர்களல்ல, வேறு சாதியை சேர்ந்த இந்து கூட பார்ப்பனராக சாதி மாற முடியாது. அதனால் தங்கள் சாதியின் (இல்லாத) அருமை பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் பார்ப்பனர்களுக்கு இல்லை. தவிரவும் பார்ப்பனர்கள் மற்றவர்கலை மனிதர்களாகவே மதிப்பதில்லை. இந்த உண்மையை எப்படி கேள்விபதில் நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்கள் விளக்குவார்கள்? அதனாலேயே பார்ப்பனர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

கட்டுரை முற்றிற்று

Thursday, March 13, 2008

பார்ப்பனரை 'பார்ப்பான்' என்று அழைக்கும் இஸ்லாமிஸ்டுகள்!

பார்ப்பனரை 'பார்ப்பான்' என்று அழைப்பது வசைச்சொல்லாகி விட்டதாகவும், அவர்களை 'பார்ப்பான்' என்று அழைக்காமல் அந்தணர் என்று அழைக்க வேண்டும் என்றும் சிலர் சொல்கிறார்கள். 'பார்ப்பனர்' 'பார்ப்பான்' போன்ற பதங்களை பயன்படுத்துவது இஸ்லாமிஸ்ட் எதேச்சாதிகார மனோபாவம் என்று கூட சொல்கிறார்கள்.

'பார்ப்பனர்' 'பார்ப்பான்' போன்ற சொற்களைப் பயன்படுத்தியவன் 'இஸ்லாமிஸ்ட் எதேச்சாதிகார மனோபாவம்' கொண்டவனாயின், "பார்ப்பனர்" என்று யாரெல்லாம் எழுதுகிறார்களோ அவர்களைவரும் இஸ்லாமிஸ்ட் என்றே அறியப்படுவராம். இஸ்லாமிஸ்ட் 'எதேச்சாதிகார மனோபாவ'த்தைக் கட்டுடைப்பதற்காகக் கொஞ்சம் பட்டியல் பார்ப்போம்:


தொல்காப்பியர் எனும் இஸ்லாமிஸ்ட்:

"பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு
அளவியன் மரபின், அறு வகையோரும்
களவினில் கிளவிக்கு உரியர் என்ப" (தொல்காப்பியச் சூத்திரம் - பொருள் 181).

வள்ளுவர் எனும் இஸ்லாமிஸ்ட்:

"மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்" (ஒழுக்கமுடமை 134).

நானூறு இஸ்லாமிஸ்ட்கள்:

"ஆவும் ஆன் இயல் பார்ப்பனமாக்களும் ..." (புறம் 9).
"பார்ப்பார்த் தப்பிய கொடுமை ..." (புறம் 34).
"ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து ..." (புறம் 367).
யாகம் என்றால் என்ன என்றே அறியாதயதவரை, "வேளாப் பார்ப்பான்" என்று குறிக்கும் அகம் (24).

இளங்கோ எனும் இஸ்லாமிஸ்ட்:

"நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் றகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார் ..." (சிலப்பதிகாரம் 1:1:49)

சீத்தலைச் சாத்தனார் எனும் இஸ்லாமிஸ்ட்:

"பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி" ... (மணிமேகலை 22:41,42)

மரியாதை தெரியாத இஸ்லாமிஸ்ட் காளமேகம்:

”மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? - …” (பாடல் 6).

மாடுதின்பான், பார்ப்பான் மறைஓது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான், கொல்லனே - தேடி
இரும்புஅடிப்பான்; செக்கான் எண்ணெய்விற்பான்; வண்ணான்
பரும்புடைவை தப்பும்;பறை (பாடல் 90).

டிஸ்கி: காற்புள்ளி இருப்பதை மறந்து "மாடு தின்பான் பார்ப்பான்" என்று வாசகர்கள் படித்துக் குழம்பிவிட வேண்டாம். இறுதிச் சொல்லைப் படித்து விட்டு முதற் சொல்லுக்குப் போக வேண்டிய லூப் வகைச் செய்யுளாகுமிது.
இதைக் "கடைமொழி மாற்று" என்று கூறுவர்.

பாரதி எனும் இஸ்லாமிஸ்ட்:

"பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்" (பாரதியார் கவிதைகள், வானவில் பதிப்பகம் - சமூகம் - மறவன் பாட்டு 6 - பக்கம் 505).

"பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே" (பாரதியார் கவிதைகள், வானவில் பதிப்பகம் - சுதந்திரப் பள்ளு - பக்கம் 181).

"சூத்திர னுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின் - அது
சாத்திரமன்று; சதியென்று கண்டோம்" (பாரதியார் கவிதைகள், வானவில் பதிப்பகம் - ஸ்மிருதிகள் 13 - பக்கம் 679).

நெடுங்கண்ணனார் எனும் இஸ்லாமிஸ்ட்:

"பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே - (குறுந்தொகை-156)

நல்லாதனார் எனும் இஸ்லாமிஸ்ட்:

"மூன்று கடன் கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசும் ..." (திரிகடுகம் 34)

பரஞ்சோதி முனிவர் எனும் இஸ்லாமிஸ்ட்:

"மழவு உருநீத்து அடல் ஏற்றின் வருவார் தம் இடத்து அணங்கின்
மனுவை ஓதிப் பழகிய பார்ப்பன மகளைப் ..." (திருவிளையாடற் புராணம் - விருத்த குமார பாலாரான படலம் 23 பாடல் 1460).
"சாம்பிழி வதென்ன பார்ப்பான் என்ன ... (திருவிளை. மா. பாத. 28).

மேற்காணும் பழைய இஸ்லாமிஸ்ட்கள் தவிர்த்து, நம் சமகால இஸ்லாமிஸ்ட்களும் நிறைய உள்ளனர்.

குந்தைவையின் சொற்களைப் 'பயன்படுத்திய' பாலகுமாரன் என்ற இஸ்லாமிஸ்ட்:

"சேரதேசத்துப் பார்ப்பனர்களால் மதுரையிலுள்ள வாலிபப் படை ஒன்று போருக்குப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. அந்தப் போர் புதுவகையானது என்று சொல்லப் பட்டது. விடியற்காலை வேளை - அல்லது இருள் பரவும் நேரம் ஓடிவந்து தாக்கி விட்டு மறைந்து கொள்வார்கள். வீடுகளுக்கு நெருப்பு வைத்து விட்டுக் கொள்ளையடிப்பார்கள். மூன்று நான்கு குழந்தைகளாய் கயிற்றில் கட்டி, கொத்தாய் குதிரில் போட்டு ..." (உடையார் முதல் பாகம் - பக்கம் 388).

"தண்டச் சோறுண்ணும் பார்ப்பை"ப் 'பயன் படுத்தும்' பல நூறு இஸ்லாமிஸ்ட்கள் இணைய உலகில் இன்னும் வலம் வந்து கொண்டு தங்கள் எதேச்சாதிகார மனோபாவத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றர். அவர்களையெல்லாம் பட்டியலிட்டால் இஸ்லாமிஸ்ட்டுகளுக்குக் கொண்டாட்டமாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு, திண்ணையில் 'பயன் படுத்திய' இஸ்லாமிஸ்ட்களை மட்டும் இங்குத் தருகிறேன்:

//'சூத்திரற்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று; சதியென்று காண் ' என்றான் பாரதி. 'இஸ்லாமியருக்கொரு நீதி; விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு வேறொரு நீதி , சங்கர மடம் சொல்லிடுமாயின் அது சமரசமன்று சதியென்று காண் ' என்பதல்லவா இந்த நிலைமை// "சமரசமன்று : சதியென்று காண்!" என்ற தலைப்பில் திண்ணையில் எழுதி இஸ்லாமிஸ்ட் ஆனார் ஞானி [சுட்டி- 2].

//இந்துக்களின் கட்சி என்றுணரப்படும் பிஜேபி-யில் கூட, கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்களில், பார்ப்பனர் அல்லாத இந்துக்களும், தலித்துக்களும் மிகக் குறைவே// என்று திண்ணையில் எழுதிய எ.அ.பாலாவும் இஸ்லாமிஸ்ட்தான் [சுட்டி-3].

//பால் வேறு ,குலம் வேறு. அந்தணர், அரசர்,வணிகர்,வேளாளர் என்பன பால்கள். பிள்ளை,முதலியார்,மறவர் இடையர் என்பன குலங்கள். பார்ப்பார் என்பது ஒரு குலம். பார்ப்பாரைக் குறிக்கும்போதெல்லாம் பார்ப்பார் என்ற குலப்பெயர் குறித்தே கூறுவர். அந்தணர், ஐயர், அறிபர், தாபதரென்னும் பெயர்களெல்லாம் முனிவரைக்குறிக்கும்// மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் கூற்றுகளைத் திண்ணையில் 'பயன் படுத்திய' எஸ்ஸார்சி ஐயமின்றி ஓர் இஸ்லாமிஸ்ட்டேதான் [சுட்டி-4].

//வடக்கே ராணுவம், காவல் துறை போன்ற உடல் வலிமை சார்ந்த பிரிவுகளில் பார்ப்பனர்கள் ஏராளமாக இடம்பெற்றிருப்பதையும் கண்டிருக்கிறேன். எனவே எனக்குப் பரிச்சயமான வட மாநிலச் சமூகங்களைச் சேர்ந்த பார்ப்பனர்கள் போர்க்குணம் மிக்கவர்களாகவும், தமது உடல் வலிமையின் காரணமாக மற்ற பிரிவினரால் மிகவும் மதிக்கத் தக்கவர்களாகவுமே இருந்தனர். அத்தகைய பார்ப்பனர்களைப் பார்த்துப் பழகியிருந்த எனக்குத் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் இயலாமையினையும் சுய பச்சாதாபத்தையும் பார்க்கையில் ஆச்சரியமாகவும் வெறுப்பாகவுங்கூட இருந்தது. அந்தக் கால கட்டத்தில் வாய்ப்பேச்சளவிலும் எழுத்து மூலமாகவும் பார்ப்பனர் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடைபெற்று வந்த போதிலும் மிகவும் அபூர்வமாகவே அவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. பார்ப்பனர் மீது மிகக் கடுமையான எதிர்ப் பிரசாரம் இருந்த போதிலும் பூணூல் அறுப்பு, குடுமி அறுப்பு என்பதெல்லாம் எப்பொழுதேனும் அங்கொன்றும் இங்கொன்றும் நிகழும் சம்பவங்களாகத்தான் இருக்கும். அவற்றுக்கு ஆளாகிறவர்களும் வறியவராய் நோஞ்சான்களான அப்பாவி அர்ச்சகர்களாகவோ, புரோகிதர்களாகவோ சமையல்காரர்களாகவோதான் இருப்பார்கள். ஒரு வக்கீலாகவோ அரசாங்க அதிகாரியாகவோ இருக்க மாட்டார்கள்! ஆக பார்ப்பன வெறுப்பாளர்களின் தாக்குதலும் கையாலாகாத அப்பாவி பார்ப்பனர்கள் மீதுதான் நடக்கும்//

இதே திண்ணையில் "தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்" என்று தலைப்பே வைத்து, மேற்கண்டவாறு வரிக்கு வரி பார்ப்பனர் என்று 'பயன் படுத்தும்' தீவிர இஸ்லாமிஸ்ட் யாராயிருக்கும்? பார்ப்பனர் என்ற சொல்லைப் 'பயன் படுத்திய' எனக்கெதிராக வழக்காட வந்த, லாயர் நேச குமாருடைய க்ளையண்ட் மலர் மன்னன்தான் அது [சுட்டி-5].

விரிவஞ்சி "பார்ப்பனர்" விஷயத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

நன்றி: திண்ணை - வஹ்ஹாபி

Wednesday, March 12, 2008

“யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க?''

தீண்டாமை என்பது சாதி இந்துக்களின் ஒருவகையான மனநோய். இந்த நோய் எனக்கில்லை. ஆனால், இது ஒரு மனச்சுளுக்கு. தீண்டாமையை கடைப்பிடிப்பது சரியானது என்று ஒவ்வொரு இந்துவும் நம்புகிறார். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களிடம் உள்ள இந்த மனச்சுளுக்கினை என்னுடைய நண்பர் எப்படி தீர்க்கப்போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. இந்துக்கள் அனைவரும் ஒருவகையான மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டால் ஒழிய, அவர்களை இந்நோயிலிருந்து குணப்படுத்துவது மிகவும் கடினமாகும்.

1. சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சூர்யா (25) என்ற தலித் இளைஞர், வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதால் அந்த இளைஞரை தேடிப்பிடித்து, துன்புறுத்தி, அதன் உச்சகட்டமாக ஆவடி காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 2.2.2008

2. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேய்கரும்பன் கோட்டை என்ற கிராமத்தில், மாட்டுப் பொங்கலையொட்டி நிகழ்ந்த ஜல்லிக்கட்டில், ஒரு தலித்துக்கு சொந்தமான மாடு வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக, 30க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் மாட்டின் சொந்தக்காரரைத் தாக்கியுள்ளனர். அவருக்கு ஆதரவாக சென்ற தலித்துகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட தலித்துகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும், இந்தக் கும்பல் அவர்களை வழிமறித்து கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. காயமடைந்த எட்டு தலித்துகள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.-இந்தியன் எக்ஸ்பிரஸ் - 25.1.2008,

3. தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் காதர் பாட்சா என்பவரின் தோட்டத்திற்குள் மூன்று தலித் சிறுவர்கள்-பெருமாள் சாமி (10), நாகலிங்கம் (15) மற்றும் ரிக்கி கெவின் (14) முகம் கழுவச் சென்றனர். அவர்களை அந்தத் தோட்ட உரிமையாளர் அடித்து, துன்புறுத்தி, நிர்வாணமாக்கி துரத்தியுள்ளார். ஆனால், இவர்களுடைய பெற்றோர்கள் அளித்த புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துள்ளனர். இறுதியில் உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்குப் பிறகே இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 5.2.2008

4. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 65 தனி பஞ்சாயத்துகளில் 35 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைய அனுமதி மறுப்பு, இழிவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துதல் போன்ற பாகுபாடுகள் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து நீடிப்பதாக இவர்கள் பத்திரப் பேப்பரில் கையெழுத்திட்டு, பத்திரிகைகளுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த மாவட்ட அரசு அதிகாரிகள், இந்த வாக்குமூலத்தை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டி வருகின்றனர்.- தி இந்து - 10.2.2008

5. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன்பட்டியில் உள்ள கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி, மூன்று வாரத்திற்கு முன்னால் அதே கிராமத்தில் உள்ள சாதி இந்துவால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டுள்ளார். இக்குற்றவாளி (சுப்பிரமணி) ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகும், உள்ளூர் காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. அங்குள்ள தலித் இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகே காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனாலும் சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 21.2.2008

6. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்து மூன்று ஆண்டுகளில் மூன்று முறை இந்நினைவிடம் சேதப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு முறை கூட சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலிஸ் கைது செய்யவில்லை, வழக்கும் பதிவு செய்யவில்லை. இரண்டு வாரத்திற்குள் இது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை எனில், புதிய தமிழகம் போராட்டத்தில் ஈடுபடும்.- தினமணி -14.2.2008

7. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களான அ. அண்ணாதுரை, பாக்கியம் உள்ளிட்ட ஆறு தனி பஞ்சாயத்து தலைவர்கள் 11.1.08 அன்று செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் மீது கடுமையான சாதி பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினர். இத்தலைவர்கள் யாருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 12.1.08

8. நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித்துகள் பொது சாலைகளில் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க சாதி இந்துக்கள் அனுமதிப்பது இல்லை. மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், ‘தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கூட தங்களுடைய செருப்புகளை கையால் தூக்கிக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்’ என்று கூறினார். தேனிமாவட்டத்தில் உள்ள நரியூத்து பஞ்சாயத்துத் தலைவரான பழனியம்மாள் கூட அந்த ஊரின் கோயிலுக்குள் நுழைய முடியாது, அவர்களுடைய கிராமத்தின் தேநீர்க்கடைகளில் உள்ள பெஞ்சுகளில் சமமாக உட்கார முடியாது, இரட்டை டம்ளர் முறையும் நீடிப்பதாகக் கூறுகிறார். கடலூர் மாவட்டம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்ப்பதால், தலித் குழந்தைகளை அங்குள்ள பக்கத்து ஊருக்கு அனுப்புகின்றனர்.

‘எவிடன்ஸ்’ என்ற அமைப்பின் இயக்குநர் கதிர், “அரசு அறிக்கையின்படி தலித்துகளுக்கு எதிராக 538 கிராமங்களில் பாகுபாடு நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை குறித்து ஏழு லட்சம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை'' என்கிறார்.- தி வீக் - 13.1.2008.

9. உத்திரப் பிரதேசத்தில் உள்ள எட்டவா கிராமத்தில் ஒரு மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்த தலித் இளைஞன் தொடர்ந்து அந்தக் கடையில் பணி செய்ய மறுத்ததற்காக, அவரை அந்தக் கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயில் தள்ளி கொன்றுவிட்டார்.- தி இந்து - 4.2.2008

நன்றி: தலித்முரசு

Friday, March 7, 2008

இந்தியாவின் “பொது எதிரிகள்”

"எத்தனை சாட்சியங்கள் கொண்டு வந்தால் என்ன? எவ்வளவு ஆதாரங்களை எடுத்துக் காட்டினால்தான் என்ன? இத்தனை ஆண்டுகளாக நாங்களும் எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் எண்ணற்ற ஆதாரங்களை கண்டுபிடித்து காட்டிவிட்டோம். இந்த அரசமைப்புச் சட்டத்தில், இந்த அரசியல் சூழலில், ஒட்டுமொத்தமாக சீரழிந்திருக்கும் இந்த சமூகத்தில் எதற்கும் பயன் இருக்கப் போவதில்லை.''


குஜராத் கலவர வழக்குகளை தொடக்கத்திலிருந்தே கையிலெடுத்து, தீவிரமாகப் போராடி வரும் மனித உரிமையாளர் தீஸ்தா செடல்வாட், குற்றவாளிகளின் வாக்குமூலங்களை அண்மையில் ‘தெகல்கா' வெளியிட்டபோது வேதனையோடு சொன்ன சொற்கள் இவை.


‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக மிக வலுவான ஆதாரங்கள் (‘தெகல்கா' புலனாய்வு) வெளிவந்த போதும், அவர் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டாரே?' என்று படித்த - படிக்காத பாமரர்களால் சொல்லப்படுகிறது. ஆனால், பல்வேறு மாய்மாலங்களை செய்து தேர்தலில் வெற்றி பெறுவதாலேயே - அவர்கள் செய்த படுகொலைகள் எல்லாம் ‘சரி' என்றாகி விடுமா? அரசியல்வாதிகள் கிரிமினல்மயமாகி வருவதையும், தேர்தல்கள் அவர்களைப் புனிதப்படுத்துவதையுமே இது காட்டுகிறது. தேர்தல் அரசியல் கெட்டதிலிருந்து கழிசடைக்குச் செல்கிறது என்பதைத் தவிர, இதில் சொல்வதற்கு வேறொன்றுமில்லை.


விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சு.ப. தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டதற்கு நான்கு வரிகளில் இரங்கல் கவிதை ஒன்றை தமிழக முதல்வர் எழுதினார். உடனே பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அவர் மீது ஆவேசமாகப் பாய்ந்து, ஆட்சியையே கலைக்க வேண்டும் என்று கூக்குரலிட்டு பெரும் ஆர்ப்பாட்டத்தை காங்கிரசும் ஊடகங்களும் செய்தன. ஆனால், ஒரு பெரும் மதக் கலவரத்தைத் தூண்டி 2000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ஒரு பயங்கரவாதியே முதலமைச்சராகப் பொறுப்பு வகிப்பதை (நரேந்திர மோடி) கண்டித்து - ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கோடியில் ஒருவர் கூட குரல் எழுப்பவில்லையே! இன்னும் சொல்லப் போனால், மோடி காங்கிரசுக்கு எதிர்நிலையில் இருப்பவர்; கருணாநிதியோ கூட்டணியில் அங்கம் வகிப்பவர்.


பார்ப்பனிய சமூக அமைப்பிற்கு குந்தகம் விளைவிக்காமல் இருந்தால் ஆளும் வகுப்பு அமைதி காக்கும்; குந்தகம் விளைவித்தால் பதறும்!


இந்திய விடுதலைக்கு முந்திய காலகட்டத்தில், காங்கிரஸ் மாநாடுகளின் ஒரு பகுதியாகத்தான் இந்து மகாசபை மாநாடுகள் நடத்தப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் காங்கிரசும் தனது இந்துத்துவ முகத்தை அவ்வப்போது வெளிக்காட்டிதான் வந்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரத்தை முன்வைத்து அரசியல் ரீதியாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக, இன்று வரை வலுவான நெருக்கடியை காங்கிரஸ் உருவாக்கியதில்லை. சொல்லப்போனால், பாரதிய ஜனதா கட்சி அவற்றை தனது சாதனையாகப் பறைசாற்றிக் கொள்ளும் சூழல்தான் நிலவுகிறது. இதனால்தான், குஜராத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ""குஜராத் பரிசோதனையை நாடெங்கும் நடத்துவோம்'' என பாரதிய ஜனதா இறுமாப்புடன் கூறுகிறது.


அரசியல் கட்சிகள் அமைதி காக்கின்றன. ஊடகங்களோ ஒரு படி மேலே சென்று, இது மோடிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தியிருக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், அதையே நாடெங்கும் செயல்படுத்துவோம் என்று பாரதிய ஜனதா கட்சி சொல்வதாகப் பூசி மெழுகுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு பரிசோதனை முயற்சியை இந்துத்துவ அமைப்புகள் தமிழகத்தில் தொடங்கிவிட்டன என்பதற்கு கோவை கலவரமும், குண்டு வெடிப்புமே சான்று.


தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை நகருக்கு அத்வானி வரும் சூழலில்தான் கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அது அத்வானியை குறிவைத்து நிகழ்ந்ததாகவே பாரதிய ஜனதா கட்சியும் ஊடகங்களும் கூறின. ஆனால் அன்றைய முதல்வர் கருணாநிதி அதனை மறுத்து, ""குண்டு வெடிப்பு உள்ளூர்ப் பிரச்சினையின் வெளிப்பாடே'' என அறிக்கை வெளியிட்டார். உடனடியாக யாரும் கைது செய்யப்படவில்லை.


ஆனால் அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. உடனடியாக குண்டு வெடிப்பு வழக்கில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. உள்ளூர்ப் பிரச்சினை என்று கூறிய அதே முதல்வர் கருணாநிதி, இந்த குண்டு வெடிப்பு அத்வானியை குறி வைத்தே நடந்தது என அறிவித்தார். சடசடவென பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். "அல் உம்மா' இயக்கம் தடை செய்யப்பட்டது. இதில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய செய்தி என்னவெனில், இதுவரை கோவை கலவரத்தில் ஈடுபட்டதற்காக எந்தவொரு இந்து அமைப்பும் தடை செய்யப்படவில்லை.


ஆக, இந்திய அரசியலில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் இந்துத்துவத்தை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கின்றன; அல்லது அப்படி ஆதரிக்கும் கட்சிகளின் தயவு வேண்டி அக்கட்சிகளின் இந்துத்துவ செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கின்றன. அதற்கும் மேலாக, அவர்களைப் பாதுகாக்கவும் செய்கின்றன. ஆனால் அதே நேரம், இந்துத்துவத்தின் அடிப்படையில், இந்து மதத்தின் அடிப்படையில் ஒன்றிணைப்பது ஒன்றே இந்து மதத்தையும், அதன் மூலமே சாதியத்தையும் நிலை பெறச் செய்ய முடியும் என்பதை இந்துத்துவவாதிகள் தெளிவாக அறிந்தே வைத்துள்ளனர். இதன் காரணமாகவே "இந்துக்களாக ஒன்றுபடுங்கள்'' என்ற முழக்கத்தை முன் வைக்கின்றனர்.


அந்த முழக்கத்தின் உண்மையான பொருள் ""இந்துக்களாக ஒன்றுபடுங்கள்; சாதிகளாக வேறுபடுங்கள்'' என்பதே!


இந்துக்களாக ஒன்றுபடுவதற்கு செய்ய வேண்டிய அத்தனையையும் திட்டமிட்டு செயல்படுத்துகின்றனர். அதன் ஒரு திட்டமே, மாற்று மதத்தினரை எதிரிகளாக முன்னிறுத்துவது. பொதுவான எதிரி என்று அடையாளம் காட்டுவதன் மூலம் மக்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக அத்திசையில் திருப்பி, மக்களை சிந்திக்க விடாமல் செய்வதே அவர்களின் நோக்கம். இந்துக்களுக்கான எதிரிகளாக மட்டுமின்றி, இந்தியாவிற்கே அவர்கள்தான் எதிரிகள் என்று கூறுவதன் மூலம் - இதனை எதிர்ப்பவர்கள் அனைவரையும் தேச விரோதிகளாக சித்தரிக்க முடிகிறது.


உண்மையில் அவர்களின் நோக்கம் முஸ்லிம்களை ஒழிப்பதோ, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதோ அன்று. மாறாக முஸ்லிம்களை பலிகடாவாக்கி அதன் மீது இந்துத்துவத்தை உறுதியாகக் கட்டமைத்து, சாதியப் படிநிலை சமூகத்தை நிலை பெறச் செய்வதே. இந்த செயல் திட்டத்திற்கு இந்நாட்டின் சிறுபான்மை மக்களை பொது எதிரிகளாக சித்தரிக்கின்றனர். அந்த இலக்கினை நோக்கியே தங்களின் அடுத்த நகர்வை ஒரிசாவில் தொடங்கியிருக்கின்றனர்.


குஜராத் கலவரமோ, பாபர் மசூதி இடிப்போ திடீரென்று ஒரே நாளில் நடந்த நிகழ்வு அல்ல. பல காலமாக இந்த நிகழ்வை நோக்கிய திட்டமிடல்களை அவர்கள் செய்தே வந்திருக்கின்றனர். திட்டமிடுதல் என்பது அந்த நிகழ்வை எப்படி நடத்துவது என்பது மட்டுமல்ல. அதைவிட முக்கியமாக, அந்நிகழ்விற்கான எதிர்வினைகளை மழுங்கடிப்பது. அதிலும் குறிப்பாக மக்கள் மத்தியில் இதற்கான ஆழமான எதிர்வினைகள் எழாத வண்ணம் இந்துத்துவ நஞ்சை லாவகமாக விதைத்து வந்துள்ளனர்.


குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு எத்தனை ஆழமானது என்பது கட்டுரையின் முதல் பகுதியிலேயே சொல்லப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்குவதோ, முஸ்லிம்களுக்கு பொருட்களை விற்பதோ, முஸ்லிம்களுக்கு வீட்டை வாடகைக்கு விடுவதோ, முஸ்லிம்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பதோ – இதுபோன்ற எந்த கலந்து பழகும் செயல்களுமே அங்கு வேறாகப் பார்க்கப்படுகின்றன.முஸ்லிம்களுமே இந்துக்கள் தங்களிடம் வந்து உறவாடுவதை சந்தேகத்தோடும், அச்சத்தோடுமே பார்க்கும் நிலையில் உள்ளனர். இது நிச்சயமாக கோத்ராவிற்குப் பின் அல்ல; அதற்கு முன்பே இந்நிலை நிலவியதால்தான் கோத்ரா சாத்தியமானது என்பதுதான் முக்கியமான உண்மை. அத்தகையதொரு மனநிலைக்கு மக்களை நகர்த்துவதில் பன்னெடுங்காலமாக திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகிறது. இது போன்ற கண்ணுக்குத் தெரியாத நச்சுப் பரப்பல் நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டுதான் உள்ளன.


இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்த பொழுது, ஜெயப்பிரகாஷ் நாராயண் அதனை எதிர்த்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து மக்கள் இயக்கம் கட்டினார். அதற்கு ஆதரவு கேட்டு அவர் காமராசரை சந்தித்த போது, காமராசர் அவரிடம் கேட்ட கேள்வி மிக ஆழமானது: “ஏன் உங்கள் போராட்டத்தில் ஜன சங்கத்தையும் இணைத்துக் கொண்டுள்ளீர்கள்? இந்த மதவாத சக்திகள் பல்வேறு வடிவங்களில் மக்களிடம் வந்தபோதும் மக்கள் அவர்களை நிராகரித்து விட்டனர்.ஆனால், அவர்கள் அங்கீகாரம் வேண்டி இன்று உங்கள் பின்னால், உங்கள் தியாகத்திற்குப் பின்னால் நின்று வர முயல்கிறார்கள். மதவாத சக்திகளை வளர்த்து விட்டீர்களானால், அதற்கான விளைவை நமது அடுத்த தலைமுறையினர் அனுபவிக்க வேண்டிய நிலை வந்துவிடும். அதனால் அவர்களை விலக்கியே வையுங்கள்'' என்றார்.


இன்றும் அதே நிலை நீடிக்கிறது. அவர்கள் பல்வேறு வடிவங்களில் நம்முன் வந்து கொண்டே உள்ளனர். ஈழத் தமிழர்களுக்காக உணவுப் பொருட்கள் திரட்டுகிறார்கள்; மலேசிய தமிழர்களுக்காக உருகுகிறார்கள். இவையெல்லாமே அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றபோடும் முகமூடிகளே. அதிலும் அவர்கள் மிகத் தெளிவாகவே இவற்றை மதப்பிரச்சனையாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.


நரேந்திர மோடி மிகத் துணிச்சலாக தமிழகத்திற்கு வருகிறார். முன்னாள் முதல்வர் அவருக்கு விருந்தளிக்கிறார். தொகாடியா ராமேசுவரத்திற்கு வந்து மாநாடு நடத்துகிறார். அனைவருக்கும் சூலம் அளிக்கிறார். இவர்கள் வந்து செல்லும் வரை தமிழக அரசு தனது காவல் துறை மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. உச்சக்கட்டமாக, தமிழக முதல்வரின் தலையை வெட்ட வேண்டுமென சொல்லியதற்குக் கூட பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை.


ஆங்கில கால்வாய் என்பது போல, சேது கால்வாய்த்திட்டத்திற்கு "தமிழன் கால்வாய்' எனப் பெயரிட வேண்டும் என தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துக் கொண்டு காத்திருக்க, எந்தவித வேண்டுகோளும் வைக்காமல், "ராமர் சேது கால்வாய்' என்று தங்கள் விருப்பத்திற்கான சொல்லாடலை மிக எளிதாகப் பரப்ப இவர்களால் எப்படி முடிந்தது? பெரியார் பிறந்த மண்ணில் மதவாதத்திற்கு இடமில்லை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று பெரியாரையே அவமதிக்கும் துணிச்சல் அவர்களுக்கு வந்திருக்கிறது. அதிலும் பெரியாரின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் ஆட்சியிலேயே இதனை அரங்கேற்றி உள்ளனர். பெரியாரை அவமதித்தவர்களுக்கும் அதனை எதிர்த்தவர்களுக்கும் "சமத்துவமாக' தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்படுகிறது.


தமிழகம் கண்டிராத பிள்ளையார் ஊர்வலங்கள் நடப்பதும், ஆண்டுதோறும் அதில் பங்கேற்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிலும் குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாவதும் தற்செயலானது அல்ல. ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் ஊர்வலங்களை முஸ்லிம்கள் வாழும் பகுதி வழியாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று இந்து அமைப்புகள் அடம்பிடிப்பதும், அந்த வாரம் முழுவதும் நகரமே ஒரு வித பதட்ட நிலையில் இருப்பதும், காவல்துறையினரின் அணிவகுப்புகள் நடப்பதும் தமிழகம் இதற்கு முன்பு கண்டிராதவை. சென்னை நகரில் மட்டுமே நடந்த அந்த ஊர்வலங்கள், ஆண்டுதோறும் விரிவுபடுத்தப்பட்டு பல நகரங்களிலும், சின்னஞ்சிறு ஊர்களிலும் நடக்கத் தொடங்கியுள்ளன.


ஓர் அரசியல் கட்சியாக தமிழகத்தில் வேரூன்றி பலம் பெறாத நிலையிலேயே அவர்களால் தமிழகத்தில் இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த இயலுமெனில், அவர்களின் திட்டமிட்ட ஊடுருவலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இனியும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், பின்னர் அவர்கள் தங்கள் பரிசோதனை முயற்சியில் வெற்றி பெற்ற பிறகு நாம் வேதனையோடும், பெரியாரின் மண்ணில் இத்தகைய மதவாதத்திற்கு இடம் கொடுத்ததற்காகவும் அவமானத்தில் தலை குனிந்தே நிற்க வேண்டும்.



நன்றி: பூங்குழலி - தலித் முரசு

Tuesday, February 26, 2008

இந்து மதத்திற்கு மாறினார்களாம் முஸ்லிம் இளைஞர்கள்! ஹய்யோ... ஹய்யோ!

பழநியில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த இரண்டு பேர் இந்து மதத்திற்கு மாறினார்களாம். பழநி திருநகரைச் சேர்ந்த ராசி முகம்மது மற்றும் நாசர் ஹசன் தான் அவர்கள்.

இவர்களுக்கு இந்து மத கொள்கைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டதால் கோவில்களுக்கு சென்று வந்துள்ளனராம். தாங்கள் மதம் மாற வேண்டும் என்ற விருப்பத்தை ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பை சேர்ந்தவர்களிடம் கூறினார்களாம். அதனால் இந்து மதத்திற்கு மாறுவதற்கான முறையான சடங்கு நடத்தி ராசி முகம்மது என்ற பெயரை ராஜீவ்குமார் என்றும் நாசர்ஹசன் என்ற பெயரை சஞ்சய் எனவும் மாற்றிக் கொண்டார்களாம்.

இந்த செய்தியை படித்து விட்டு, குறிப்பாக இந்து மத கொள்கைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டது என்பதை படித்து விட்டு நமது நண்பர் ஒருவர் லாட்சில் ரூம் போட்டு சிரித்துக் கொண்டிருப்பதாக தகவல்.

மதம் மாறியவர்களை எந்த சாதியில் சேர்த்துக் கொண்டார்களாம்?

அப்படியே அக்ரஹாரத்துல ஒரு அக்காமடேஷன் போட்டுக் கொடுத்து ஆளுக்கொரு இந்து பார்ப்பன பெண்ணையும் கண்ணாலம் பண்ணி வச்சாங்கன்னா இன்னும் இதப்போல நிறைய இசுலாமிய கிருஸ்துவ இளைஞர்களுக்கு வலை வீசலாமே?

http://www.dinamalar.com/2008FEB26/events_tn9.asp