Wednesday, March 19, 2008

பார்ப்பன மதக் கோட்பாடுகளில் ஆண் - பெண் வக்கரித்த உறவுகள்! - 1

இந்து மதம் சார்ந்து உருவான ஆண் - பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. அவற்றில் சில அக்காலத்துக்கே உரிய எதார்த்தச் சமுதாயத்தைப் பிரதிபலித்து இருக்கும். அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து, இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப் படைப்புகளை உருவாக்கினர். அப்போது இங்கு இருந்த சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும், பின்னால் இந்து மதமும் ஊடுருவி அழித்தபோது, சிறுவழிபாட்டுக் கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம் கொண்டுவந்தது.

இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க எல்லைக்குள், பாலியலை விகாரப்படுத்தி, உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம், ஆணாதிக்க காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தப் பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை. ஆனால் எதார்த்தம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சார்ந்த விகாரத்தை எல்லாம் மனிதனின் வழிபாடாக்கும் நிலையில், இதைத் தொகுத்து அம்பலப்படுத்துவதும், ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியதும் அவசியமாகிவிடுகின்றது.

இப்படிப்பட்ட வக்கிரங்கள் தான், இன்று பின்நவீனத்துவம் கோரி முன்வைக்கும் வக்கரித்த ஆண் - பெண் உறவுகளின் அடிப்படையாகும். இன்று இதைக் கோரியும், எழுதியும்;, முன்வைக்கும் அனைத்துக்கும் முன்னோடியாக இந்து மதத்தின் வக்கரித்த உறவுகள் உள்ளன.

இன்று பின்நவீனத்துவவாதிகள் வைக்கும் பலவற்றை அன்றே இந்து மதம் முன்வைத்தது என்ற உண்மையை எடுத்துக் காட்டுவதன் மூலம், இன்றைய நவீன ஏகாதிபத்தியப் பாலியல் வக்கிரமும் அம்பலமாகிவிடும்.

பார்ப்பனச் சனாதனத் தர்மமாக மனுசாஸ்திரத்தின்படி வர்ண, சாதி வகையில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை விடுவிப்பதாகக் கூறிய புத்த மதம் இந்தியத் துணைக்கண்டத்தில் செல்வாக்குப் பெற்றது. அதனால் பார்ப்பன சனாதன மதம் அழிந்து போகும் நிலையை எட்டி பல ஆண்டுகளாகத் தலையெடுக்க முடியாமல் கிடந்தது.

இந்நிலையில் காலடியில் தோன்றிய ஆதிசங்கரன் காசிவரை பயணம் செய்து அத்வைதத்தைப் பரப்பினார். வர்ண, சாதி வதையில் ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களை மீண்டும் பார்ப்பன மதத்துக்குள் ஈர்ப்பதற்காகச் சிறுதெய்வங்களை எல்லாம் பெருந்தெய்வங்களின் அவதாரங்கள் என உறவுபடுத்தும் மதக்கோட்பாடுகளை உருவாக்கினார். அதாவது குல, கண தெய்வங்கள் எல்லாம் புராண, இதிகாசக் கடவுள்களுடன் உறவுபடுத்தி புனைவுகளை உருவாக்குவதன் மூலம் பார்ப்பன மதத்துக்குப் புத்துயிர் கொடுக்க முனைந்தார்.

இந்துமத உருவாக்கத்தினூடாக, வக்கரித்த உறவுகள் புனையப் பட்டபோது, சிறுவழிபாடுகள் சீரழிக்கப்பட்டன. இங்கு சிறுவழிபாட்டுக் கடவுள்கள் ஏன், எதற்காக, எந்த உற்பத்தி மீது உருவாயின என்பதை ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக அந்தச் சிறுகடவுள்களைப் புணர்ந்தும், வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்தும் உறவாக்கிக் குடும்பத்தில் இணைத்ததன் மூலம், அவற்றோடு இந்துமதம் சார்ந்த உறவுகள் அங்கீகாரம் பெற்றன. அவற்றின் நாற்றத்தையும் ஆபாசத்தையுமே அம்பலப்படுத்துவதில் கவனமெடுக்கின்றது இப்பகுதி.

நன்றி: http://www.tamilcircle.net/

1 comment:

Thamizhan said...

இந்து மதம் இந்து மதம் என்று சிந்து பாடும் திராவிடத் தமிழர்கள் நன்றாகக் கவணிக்க வேண்டியது.

இந்து மதம்-பார்ப்பனீயம் = ?

இந்துத்துவா- பார்ப்பனீயம்= ?

திருக்குறள் x மனு