Monday, May 5, 2008

இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தைச் சொல்லுவதே இராமாயணம்

இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள் - 4

இன்று எதார்த்தத்தில் பெண் மீதான சந்தேகங்கள், அது சார்ந்த சித்ரவதைகள், இதனால் பெண்ணைக் கைவிடுதல் போன்றவற்றின் முன்னோடியான தந்தையாக ஆணாதிக்க இராமன் இருக்கின்றான் என்றால் அதை மறுக்கமுடியாது.

இங்கு இராவணன் சீதையைத் தூக்கிச் சென்று நடத்திய முறைகள் பொதுவான எல்லையில் ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்டவையல்ல.

இராவணன் சீதையைத் தூக்கியதே, தங்கை சூர்ப்ப நகைக்கு நடந்த கொடுமையின் அடிப்படையில்தான்;. இந்த இடத்தில் இதற்காகச் சீதையைக் கொண்டு சென்றது குற்றமே ஒழிய ("வால்மீகி இராமாயணப்படி, சீதை இராமனை விட்டுவிட்டு இராவணனுடன் தானாகவே சென்றாள்."), இராமன் செய்தது போன்ற இழிந்த ஆணாதிக்கக் குற்றமல்ல.

வரலாற்றில் மத யுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை நடந்ததைப்போல பெண்களைக் கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது வைப்பாட்டியாக வைத்திருப்பதும் என்ற ஆணாதிக்கக் கொடூரம் எதையும் இராவணன் செய்ததில்லை.

இராவணன் சீதையை விரும்புகின்றபோது, அவளின் விருப்பமின்றித் தொடுவதைக் கூடக் கைவிட்டவன்;. சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, சீதை தனது மேலாடைகளைக் களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும், இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக, பெண்ணைப் பெண்ணாக மதித்தான்.

இராவணன் பெண்ணைத் தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும்.

இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டிய பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தைச் சொல்லுவதே இராமாயணம்.

நன்றி: http://www.tamilcircle.net/

No comments: