தவறு செய்யும் பார்ப்பனர்களுக்கு என்ன தண்டனை விதிக்கலாம் என்று மனு சாஸ்திரம் சொல்வதை பாருங்கள்!
'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).
மத்தவங்கனா உயிரை எடுக்கணுமாம். பார்ப்பனென்றால் மயிரை எடுத்தால் போதுமாம்!
எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).
ஊரை விட்டு துரத்துனாகூட பொருளோட துரத்துனுமாம்!
பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379)
இதைச் சொல்லியே அந்தகால மன்னர்களையெல்லாம் ப்ரெய்ன்வாஷ் பண்ணியிருக்கார்கள் பார்ப்பனர்கள்.
அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281)
பார்ப்பான் பக்கத்துல உட்கார்ந்ததுக்கே மற்றவர்களை ஊரை விட்டு விரட்டுனுமாம். ஆனா பார்ப்பான் இன்னொருத்தனை கொலை பண்ணுனாகூட அதிகபட்சமா அவனை ஊரை விட்டு துரத்துரதுதான் தண்டனை! அதுவும் பொருளோட!
அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412)
இதுதான் நோகாம நொங்கு திங்குறது! நாலாம் வருணத்தாரெல்லாம் பார்ப்பனர்களின் ஏவலுக்காகவே உள்ளவர்களாம்! இதெல்லாம் உங்களுக்கே டூமச்சா தெரியலையா?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அடி செருப்பால்,
இதை மனு- அதர்மம் என்பதே பொருத்தம்.
Post a Comment