Tuesday, February 26, 2008

2 தாலி கட்டிக் கொண்ட பெண் வெட்டப்பட்டார். அப்படின்னா 5 தாலி கட்டின பாஞ்சாலிக்கு என்ன தண்டனை?

கழுத்தில் 2 தாலியுடன் வாழ்ந்த தங்கையை `அவமானம் தாங்காமல் கொன்ற' அண்ணன் காவல் துறையினரிடம் சிக்கினார். பாவம்.. அந்தப் பெண் பார்ப்பன பெண்ணாக இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? பார்ப்பன புராணக்கதையில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மனைவியாக இருந்த பாஞ்சாலியை முன்னுதாரணமாக எடுத்து தான் 2 தாலி மட்டுமே கட்டிக் கொண்டதாக சொல்லி தப்பித்திருக்கலாமே!


தஞ்சை, பிப்.26-
`கழுத்தில் 2 தாலியுடன் வாழ்ந்ததால் அவமானம் தாங்காமல் தங்கையை கொலை செய்தேன்' என்று, கைது செய்யப்பட்ட சகோதரர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

படுகொலை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சரகம் தோகூர் காமாட்சி அம்மன் கோவில் அருகே உமாராணி (வயது 35) என்பவர் கொலை செய்யப்பட்டார். இவர் தஞ்சை வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர்.உமாராணியின் கணவர் சாமிநாதன் ஏற்கனவே இறந்து விட்டார். இவர், சென்னையில் பொதுப்பணித்துறை என்ஜினீயராக பணிபுரிந்தவர். கணவர் இறந்த பின்னர் உமாராணி வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் லலிதா, சரிதா, மாமா ராஜா ஆகியோருடன் காரில் திருச்சி வந்தபோது கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

அண்ணன் கைது

உமாராணியின் கணவர் சாமிநாதன் ஆரணியில் வேலைபார்த்தார். அவர் இறந்த பின்னர் தன்னுடைய குழந்தைகள் சுஷ்மிதா (11), சுபலட்சுமி (7) ஆகிய 2 பேரையும் உமாராணி சென்னையில் உள்ள சமூக சேவை இல்லத்தில் சேர்த்து தானும் சமூக சேவையில் ஈடுபட்டார். அவரை கொலை செய்ததாக, அவருடைய சொந்த சகோதரர்களான ராதாகிருஷ்ணன், சரவணன் உள்பட 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.இவர்களில் உமாராணியின் அண்ணன் சரவணன் (38) என்பவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது சரவணன் கூறியதாவது:-

கள்ளத்தொடர்பு

"எனது சகோதரி உமாராணியை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினீயர் சாமிநாதனுக்கு திருமணம் செய்து வைத்தோம். அவர்களுக்கு சுஷ்மிதா, சுபலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.உமாராணிக்கு வேறு ஒரு நபரிடம் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அவரிடம் உமாராணி தாலி கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார்.இதனால் மனமுடைந்த கணவர் சாமிநாதன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இறந்தார்.

உமாராணியின் கழுத்தில் இரண்டு தாலி இருந்த விவரம், கணவன் சாமிநாதனின் இறுதிச் சடங்கின் போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது.இதனை நாங்கள் கண்டித்தோம். ஆனால் உமாராணி கேட்கவில்லை.

இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி உமாராணி இங்கு வந்தது பற்றி, அவருடன் காரில் வந்த அவருடைய மாமாவான ராஜாவே எங்களிடம் கூறினார். அதன் அடிப்படையில் நாங்கள் பின்தொடர்ந்து வந்து, உமாராணியை வெட்டிக் கொலை செய்தோம்.இவ்வாறு சரவணன் வாக்குமூலத்தில் கூறினார்.

மேலும் ஒருவர் கைது

சரவணன் கொடுத்த வாக்குமூலத்தின் படி, கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், அரிவாள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.தொடர்ந்து விசாரணை நடத்தியதில் உமாராணியுடன் காரில் வந்த அவருடைய மாமா ராஜா (32) உமாராணியின் நடவடிக்கைகளை சரவணனிடம் அறிவித்து வந்தது தெரியவந்தது.இதனையடுத்து ராஜாவையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் கொலையில் தொடர்புடைய உமாராணியின் மற்றொரு சகோதரர் ராதாகிருஷ்ணன் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

http://dailythanthi.com/article.asp?NewsID=396034&disdate=2/26/2008

No comments: